Detox Drink : இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம் இந்த பானம்! உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Drink : இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம் இந்த பானம்! உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும்!

Detox Drink : இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம் இந்த பானம்! உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும்!

Priyadarshini R HT Tamil
Jul 29, 2024 12:01 PM IST

Detox Drink : இரண்டே நிமிடத்தில் இந்த பானத்தை செய்துவிட முடியும். இது உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும் ஆற்றல்ககொண்டது.

Detox Drink : இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம் இந்த பானம்! உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும்!
Detox Drink : இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம் இந்த பானம்! உடலில் உள்ள கழிவுகளை அடித்து விரட்டும்!

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடலில் சேரும் தேவையற்ற கழிவுகளை நீக்குவது என்றால் என்ன?

உடலில் உள்ள கழிவுகளை நீக்க பல்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன. இதை ஆங்கிலத்தில் டீடாக்ஸ் அல்லது கிளன்சஸ் என்று அழைக்கிறார்கள். இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் முறை ஆகும். உங்கள் உடலில் கழிவு நீக்கம் செய்வதால், அது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மேலும் உடல் பருமனை குறைக்கிறது.

கழிவுநீக்கம் செய்யும் முறைகள்

விரதம்

பழச்சாறுகள் மட்டும் அருந்துவது அல்லது பானங்கள் அல்லது வெறும் தண்ணீர் மட்டுமே ஒரு நாள் முழுவதும் பருகுவது

குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் உட்கொள்வது

உணவுக்கு பதில் எடுத்துக்கொள்ளும் சப்ளிமென்ட்களை மட்டுமே சாப்பிடுவது

மூலிகைளை மட்டுமே பயன்படுத்துவது

இனிமாக்கள் கொடுப்பது

மலமிளக்கிகள் எடுத்துக்கொள்வது

பெருங்குடல் ஹைட்ரோ தெரபி மூலம் குடலை சுத்தம் செய்வது

இவை கழிவுநீக்க முறைகளாக உள்ளன. இவற்றை வணிக மையங்கள் செய்கின்றன. இது இயற்கை மருத்துவத்தின் ஒரு அங்கமாக உள்ளது.

இதுபோல் கழிவுநீக்கம் செய்யும்போது உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துள்ளது. உடல் எடை குறைந்துள்ளது. இன்சுலின் எதிர்ப்பு கிடைத்துள்ளது, ரத்த அழுத்தம் குறைந்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் நாம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவது நல்லதுதான் என்றாலும் கவனம் தேவை. ஏனெனில் அதிகளவில் வணிக ரீதியாக நாம் செல்லும்போது பாதுகாப்பும் அவசியம். 

ஆனால் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய கழிவுநீக்க முறைகளை தாராளமாக பின்பற்றலாம். ஏனெனில் அவை உதவவில்லையென்றால் கூட, பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி – ஒரு இன்ச்

சீரகம் – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

தேன் – ஒரு ஸ்பூன்

தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரை சுடவைத்து, அதில் பொடித்த இஞ்சி மற்றும் சீரகத்தை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். இவற்றின் சாறுகள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி, அந்த தண்ணீர் நிறம் மாறியவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ளவேண்டும்.

அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து இளஞ்சூட்டில் பருகினால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும். இந்த பானத்தை உடற்பயிற்சி முடித்தவுடன் தினமும் பருகவேண்டும்.

குறிப்பாக உடற்பயிற்சி முடித்து, ஸ்டீம் பாத் எடுக்கும் நாட்களில் ஸ்டீம் பாத் முடித்தவுடன் இதை பருகினால், கடகடவென உடலின் கழிவுகள் வெளியேற்றப்படும். நீங்கள் முயன்று பார்த்தால் நிச்சயம் பலன் கிட்டும். எப்போதுமே காய்ச்சிய தண்ணீரை இளஞ்சூட்டில் பருகுவது உடலுக்கு நல்லது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.