Detox Drink : கழிவுகளை அடித்து விரட்டும் குங்குமப்பூ பானம்; சரும பளபளப்பும் உறுதி! 3 பொருள், 30 நாள் சேலஞ்ச்!
உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் பானத்தை 30 நாட்கள் பருகுவதால் என்னவாகிறது?

Detox Drink : கழிவுகளை அடித்து விரட்டும் குங்குமப்பூ பானம்; சரும பளபளப்பும் உறுதி! 3 பொருள், 30 நாள் சேலஞ்ச்!
கழிவுநீக்கம் என்றால் என்ன?
கழிவு நீக்கம் என்பது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிவிட்டால், உங்கள் உடல் நன்முறையில் செயல்படும். உங்கள் உடலில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் தொடர்ந்து சேர்ந்துகொண்டேயிருக்கும். நாம் உண்ணும் உணவு, பானம் மற்றும் அனைத்தும் நமது உடலில் கழிவை சேர்த்துக்கொண்டு இருக்கும். அதை நாம் முறையாக நீக்கும்போதுதான் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
உடலுக்கு கழிவு நீக்கம் ஏன் முக்கியம்?
உடல் ஆரோக்கியம்
உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் ஆகியவற்றை நீக்குவது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.
நோய்களில் இருந்து பாதுகாக்கிறது
கழிவு நீக்கம் செய்வது உங்கள் உடலில் நோய் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நச்சுக்களை நீக்குவது செல்களின் சேதத்தைத் தடுக்கிறது.
