Detox Drink: வாரம் ஒருமுறை இந்த பானம் எடுத்தால், உடல், மனம், ஹார்மோன் சுழற்சி ஆரோக்கியமாகும் – மருத்துவர் கூறுவது என்ன?
Detox Drink : உடலில் உள்ள கழிவுகளை நீக்க வெள்ளரியின் பயன்பாடு குறித்து மருத்துர் விளக்குகிறார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் உஷா நந்தினி புதுயுகம்டிவிக்கு கொடுத்த நேர்காணலில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பானம் குறித்து கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கழிவுநீக்கம் என்றால் என்ன?
கழிவு நீக்கம் என்பது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிவிட்டால், உங்கள் உடல் நன்முறையில் செயல்படும். உங்கள் உடலில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் தொடர்ந்து சேர்ந்துகொண்டேயிருக்கும். நாம் உண்ணும் உணவு, பானம் மற்றும் அனைத்தும் நமது உடலில் கழிவை சேர்த்துக்கொண்டு இருக்கும். அதை நாம் முறையாக நீக்கும்போதுதான் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
உடலுக்கு கழிவு நீக்கம் ஏன் முக்கியம்?
உடல் ஆரோக்கியம்
உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் ஆகியவற்றை நீக்குவது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.
நோய்களில் இருந்து பாதுகாக்கிறது
கழிவு நீக்கம் செய்வது உங்கள் உடலில் நோய் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நச்சுக்களை நீக்குவது செல்களின் சேதத்தைத் தடுக்கிறது.
முக்கிய உறுப்புகள்
உடலில் உள்ள கழிவுகளை நீக்குவது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நன்முறையில் இயங்க உதவுகிறது. அதில் உள்ள கழிவுகளை நன்முறையில் வெளியேற்ற உதவுகிறது.
கெட்டப்பழக்கங்களை கைவிட உதவுகிறது
ஆல்கஹால் போன்ற பழக்கங்களை கைவிட உதவுகிறது.
உடலில் கழிவுகளை நீக்குவது எப்படி?
ஆரோக்கியமான உணவு
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள், காய்கறி, நட்ஸ்கள் மற்றும் மசாலாக்களை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
நீர்ச்சத்து
உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரைப் பாருங்கள். அது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவும்.
உடற்பயிற்சி
உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களுக்கு உதவும்.
ஆல்கஹால் அளவை கட்டுப்படுத்தவேண்டும்
ஆல்கஹால் உங்கள் கல்லீரலை சேதப்படுத்திவிடும். எனவே அதை குறைக்கவேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்ளவேண்டும்
உங்கள் உடலில் கழிவுகள் அதிகம் சேர்வதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளே காரணமாகின்றன.
மனஅழுத்தம், தூக்கமின்மையால் கஷ்டப்படுகிறோம். தேவைற்ற உணவுகளை எடுத்துக்கொள்கிறோம். இதனால் நமது உடலில் எண்ணற்ற கழிவுகள் தேங்குகிறது. அதற்கு வாரம் ஒருமுறை நாம் ஒரு பானத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். அது என்னவென்று மருத்துவர் கூறுகையில், சமூக வலைதளங்களில் நாம் நிறைய விஷயங்களைப் பார்க்கிறோம். அதில் ஒன்று இந்த கழிவு நீக்க பானங்கள். இவை உண்மையிலேயே உங்களுக்கு உதவுகிறதா என்றால், அதில் இந்த ஒரு பானம் உங்களுக்கு கட்டாயம் உதவும்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 2
இஞ்சி – ஒரு இன்ச்
புதினா – கைப்பிடியளவு
எலுமிச்சை சாறு – அரைப்பழம்
இந்துப்பு – தேவையான அளவு
செய்முறை
வெள்ளரிக்காயை நறுக்கி, அதில் இஞ்சி, புதினா, இஞ்சி, எலுமிச்சை பழம் அரை பிழிந்துவிட்டு, அதை அடித்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். அதை அப்படியே ஸ்மூத்தி போல் பருகினால், நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். இதை வாரம் ஒருமுறை பருகுவது உடலுக்கு நல்லது. இதை செய்யும்போது, உடலும், மனமும், ஹார்மோன்கள் சூழற்சியும் ஆரோக்கியம் பெறும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்