தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Drink : இந்த ஜூஸை 14 நாட்கள் பருகுங்கள்! உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டு ஷாக் ஆவீர்கள்!

Detox Drink : இந்த ஜூஸை 14 நாட்கள் பருகுங்கள்! உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டு ஷாக் ஆவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 22, 2024 03:00 PM IST

Detox Drink : இந்த ஜூஸை 14 நாட்கள் பருகிப் பாருங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

Detox Drink : இந்த ஜூஸை 14 நாட்கள் பருகுங்கள்! உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டு ஷாக் ஆவீர்கள்!
Detox Drink : இந்த ஜூஸை 14 நாட்கள் பருகுங்கள்! உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டு ஷாக் ஆவீர்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால், இதை எடுத்துக்கொள்ளும் முன், சிலவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று வெள்ளை பூசணிக்காய், இதில் ஹைப்போகிளைசமிக் என்ற உட்பொருள் உள்ளது. நீங்கள் நீரிழிவு நோயாளிகள் என்றால், அந்த இந்த உட்பொருள் உங்கள் நீரிழிவு மாத்திரைகளுடன் வினைபுரிந்து, உங்கள் சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மேலும் வெண் பூசணிக்காய் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த ஜூஸை கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். 

இதுபோன்ற உடல் உபாதைகள் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரிலோ அல்லது முதலில் சிறிய அளவில் எடுத்துவிட்டு, அது எவ்வித பின்விளைவுகளையும் ஏற்படுத்தாவிட்டால், மேலும் அளவை அதிகரிக்கலாம். எனவே எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். மற்றவர்கள் தாராளமாக 14 நாட்கள் இந்த ஜூஸை பருகலாம்.

தேவையான பொருட்கள்

வெண் பூசணி – ஒரு கப்

(சுத்தம் செய்து, விதைகளை நீக்கி, நறுக்கிக்கொள்ள வேண்டும்)

வெள்ளரி – அரை கப்

எலுமிச்சை சாறு – ஒரு பழத்தின் சாறு

புதினா – ஒரு கைப்பிடியளவு

இஞ்சி – ஒரு ஸ்பூன் (துருவியது)

உங்களுக்கு தேவையென்றால் இதில் சிலவற்றின் அளவை அதிகரித்தும் கெள்ளலாம்.

செய்முறை 

அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்து அப்படியே பருகவேண்டும். வடிகட்டியும் பருகலாம். ஜூஸை தயாரித்த உடனே பருகவேண்டும். சிறிது தாமதம் ஆனால் அதன் நன்மைகள் முழுமையாகக் கிடைக்காது.

இதை 14 நாட்கள் பருகிப்பாருங்கள் உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும். வெண் பூசணி மற்றும் வெள்ளரியில் உள்ள அதிகப்படியான தண்ணீர் சத்துக்கள் உங்கள் சிறுநீரகங்களை நன்றாக செயல்பட உதவும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளையும் நன்றாக நீக்கும் தன்மை கொண்டது.

இஞ்சி, செரிமானத்துக்கு நல்லது மற்றும் இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. எலுமிச்சை உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை வழங்கி வளர்சிதைக்கு உதவுகிறது. புதினா இலைகள் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஜூஸ் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கும்.

உடல் நலன் என்பது தினமுமே நீங்கள் பின்பற்றவேண்டிய ஒன்று, சிறுசிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தை பின்பற்றலாம். எனவே ஆரோக்கியத்தை பேண நீங்கள் சில முயற்சிகளை தொடர்ந்து எடுக்கவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்