தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Drink : உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்யவேண்டுமா? 24 நாட்கள் இந்த ஒரு பானம் போதும்!

Detox Drink : உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்யவேண்டுமா? 24 நாட்கள் இந்த ஒரு பானம் போதும்!

Priyadarshini R HT Tamil
Jun 14, 2024 04:49 PM IST

Detox Drink : உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்யவேண்டுமா? 24 நாட்கள் இந்த ஒரு பானத்தை தொடர்ந்து பருகி வித்யாசத்தை பாருங்கள்.

Detox Drink : உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்யவேண்டுமா? 24 நாட்கள் இந்த ஒரு பானம் போதும்!
Detox Drink : உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்யவேண்டுமா? 24 நாட்கள் இந்த ஒரு பானம் போதும்!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நமது உடலில் தங்கும் கழிவுகள்தான் நமது உடலில் வியாதிகளை ஏற்படுத்துகின்றன. எனவே நமது உடலை அவ்வப்போது கழிவுநீக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கழிவுகளால் ஏற்படும் பிரச்னைகள் உங்களை பாதிக்காது.

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 1 (நறுக்கிக்கொள்ளவேண்டும்)

ஆப்பிளில் கால்சியம் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது. இது உஙகளுக்கு எலும்புகள் உருவாக உதவுகிறது. உங்கள் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படாமல் தடுக்கிறது.

பீட்ரூட் – 1 (தோல் சீவி நறுக்கிக்கொள்ள வேண்டும்)

பீட்ரூட்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒன்று. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.

எலுமிச்சை பழம் – 1

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது.

செய்முறை

நறுக்கிய ஆப்பிள், தோல் நீக்கி சுத்தம் செய்த பீட்ரூட், எலுமிச்சை சாறு இவற்றுடன் அரை லிட்டல் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.

இதை 24 நாட்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவரவேண்டும். உங்களின் கல்லீரல் மற்றும் உடல் முற்றிலும் சுத்தமாகும். உடலில் தங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

பீட்ரூட், ஆப்பிள், எலுமிச்சை சாறின் நன்மைகள்

பீட்ரூட்டில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது கல்லீரல் செல்களை பாதுகாக்கும், உடல் முழுவதிலும் இருந்து கழிவுகளை வெளியேற்றும். இது ஆப்பிளின் செரிமானத் தன்மை மற்றும் எலுமிச்சையின் கழிவுநீக்க குணத்துடன் சேரும்போது, இது உங்கள் உடலை ஆரோக்கியமாக இயற்கை முறையில் சுத்தம் செய்கிறது.

மேலும் பீட்ரூட்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன. இதில் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் முக்கிய மினரல்கள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் உள்ளே நன்றாக சுத்தம் செய்கிறது.

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்துக்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவற்றை எதிர்த்து போராட உதவுகிறது. எலுமிச்சை உங்களுக்கு நாள்முழுவதும் தேவைப்படும் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் ஆகியவற்றை வழங்குகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.