Detox Drink : சிறுநீரகத்தையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்யவேண்டுமா? இந்த மூன்றும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Drink : சிறுநீரகத்தையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்யவேண்டுமா? இந்த மூன்றும் போதும்!

Detox Drink : சிறுநீரகத்தையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்யவேண்டுமா? இந்த மூன்றும் போதும்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 09, 2024 01:32 PM IST

Detox Drink : சிறுநீரகத்தையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்யவேண்டுமா? இந்த மூன்றும் போதும். வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்து பயன்பெறுங்கள்.

Detox Drink : சிறுநீரகத்தையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்யவேண்டுமா? இந்த மூன்றும் போதும்!
Detox Drink : சிறுநீரகத்தையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்யவேண்டுமா? இந்த மூன்றும் போதும்!

மருந்துகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உங்கள் உடலில் தங்கும் அழுக்குகள்தான் உங்களுக்கு பல்வேறு வியாதிகளைக் கொண்டு வருகின்றன. எனவே உங்கள் ஒவ்வொரு உள்ளுறுப்பையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம் ஆகிறது. அந்த வகையில் சிறுநீரகத்தையும், கல்லீரலையும் சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கேரட் – 2

வெள்ளரி – 1

எலுமிச்சை பழம் – அரைப்பழம்

செய்முறை

கேரட்டை நன்றாக சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதேபோல் வெள்ளரியையும் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக்கொள்ளவேண்டும்.

அரை எலுமிச்சை பழத்தில் இருந்து சாறை பிழிந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நறுக்கிய கேரட், வெள்ளரியை மிக்ஸி ஜாரில் சேர்த்து 300 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு டம்ளர் எடுத்து, எலுமிச்சை சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் வாரத்தில் மூன்று நாட்கள் பருகவேண்டும்.

தொடர்ந்து பருகினால், உங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் இரண்டும் சுத்தமாகும். இவையிரண்டும் நன்றாக இயங்கினாலே உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். இதனால் உங்களுக்கு எவ்வித வியாதியும் வராது.

நாம் இதுபோல் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய இயற்கை முறை வைத்தியங்களை செய்துகொள்வது நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கையைத் தரும்.

கேரட், வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

இந்த சாறை பருகுவதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சுத்தமாவது மட்டுமல்ல, உங்கள் உடலுக்கு மேலும் பல நன்மைகளையும் கொடுக்கிறது.

உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை இந்தச்சாறு வழங்குகிறது. ஒவ்வொரு வாயிலும் இது உங்கள் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது. மேலும் வறட்சி மற்றும் பொலிவின்மையைப் போக்கி, உங்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது. இந்த சாறின் மூலம் இயற்கை சருமப்பொலிவைப் பெறுங்கள்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. உங்கள் செல்களை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

வீக்கத்துக்கு எதிராக போராடுகிறது. உங்கள் உடலில் ஏற்படும் அசவுகர்யங்கள் மற்றும் வீக்கத்தை இயற்கையாகவே குறைக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.