Detox Blood Vessels, Liver : ரத்த நாளங்கள் மற்றும் கல்லீரலை ஒரே நேரத்தில் சுத்தப்படுத்த வேண்டுமா? இந்த பானம் போதும்!
Detox Blood Vessels, Liver : ரத்த நாளங்கள் மற்றும் கல்லீரலை ஒரே நேரத்தில் சுத்தப்படுத்த வேண்டுமா? இந்த பானம் மட்டும் போதும். உங்கள் ரத்த ஓட்டம் சீராக உதவும்.

ரத்த நாளங்கள்
ரத்த நாளங்கள் நமது உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்பவையாகும். உடல் முழுவதும் ரத்தம் செல்லும் இதன் துவக்கம் மற்றும் முடிவு இரண்டும் உங்கள் இதயத்தில் இருக்கும். ரத்த நாளங்கள் மற்றும் இதய நாளங்கள்தான் உங்கள் உடலில் ரத்த ஓட்ட மண்டலத்தை உருவாக்குகின்றன. உடலில் 60 ஆயிரம் மைல் ரத்த நாளங்கள் உள்ளன. அவை மூன்று வகைப்படும். தமனிகள் உங்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. நரம்புகள் உங்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை பின்புறம் எடுத்துச்செல்கின்றன. ரத்த நுண் குழாய்கள், சிரைகள் தமனிகளையும் நரம்புகளையும் இணைக்கின்றன. உங்கள் உடலில் இவற்றில் எப்படி ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்று பாருங்கள்.
ரத்த ஓட்டம்
உங்கள் இதயத்தின் வலப்புறத்தில் நரம்புகள ரத்தத்தைக் கொண்டு வருகின்றன.
நுரையீரல் தமனிகள் உங்கள் நுரையீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. அங்கு அவை ஆக்ஸிஜனைப் பெறுகின்றன.