Director Ajay Gnanamuthu: டிமாண்டி காலனி பட இயக்குனருக்கு காதல் திருமணம்! வாழ்த்திய திரை பிரபலங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Ajay Gnanamuthu: டிமாண்டி காலனி பட இயக்குனருக்கு காதல் திருமணம்! வாழ்த்திய திரை பிரபலங்கள்!

Director Ajay Gnanamuthu: டிமாண்டி காலனி பட இயக்குனருக்கு காதல் திருமணம்! வாழ்த்திய திரை பிரபலங்கள்!

Suguna Devi P HT Tamil
Jan 20, 2025 10:21 AM IST

Ajay Gnanamuthu:2024 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்றான டிமான்டி காலனி 2 படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இவரது திருமணத்தில் விக்ரம் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.

Director Ajay Gnanamuthu: டிமாண்டி காலனி பட இயக்குனருக்கு காதல் திருமணம்! வாழ்த்திய திரை பிரபலங்கள்!
Director Ajay Gnanamuthu: டிமாண்டி காலனி பட இயக்குனருக்கு காதல் திருமணம்! வாழ்த்திய திரை பிரபலங்கள்! (X)

இரண்டு படங்களிலும் வெற்றி 

 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தொடர்ந்து பேய் படங்கள் டிரெண்டாகி வந்த நிலையில் டிமான்டி காலனியும் அதன்  வெற்றியை நிலைநாட்டில் இருந்தது. மேலும் இதனைத் தொடர்ந்து நயன்தாரா .விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் மற்றும் அதர்வா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே வைத்து இமைக்கா நொடிகள் எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு சிறந்த ஆக்சன் படமாக அமைந்தது. மேலும் ரசிகர்களிடத்திலும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. 

 தொடர்ந்து வெற்றி படங்களாக இரண்டு படங்களை கொடுத்திருந்த அஜய் ஞானமுத்துக்கு அடுத்ததாக அமைந்த படம் கோப்ரா, சியான் விக்ரமின் நடிப்பில் பல கெட்டப்புகளில் விக்ரம் நடித்து இருப்பார். கெட்டப்புகளுக்கும் நடிப்பிற்கும் பெயர் போன சியான் விக்ரம் நடித்த இந்த கோபுரா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக விமர்சன ரீதியாகவும் எதிர்மறையான கருத்துக்களை பெற்றிருந்தது. இப்படம் கடும் தோல்வியை சந்தித்து இருந்தது. இப்படத்தின் பாடல்கள் மட்டும் ஹிட்டாகி இன்று வரை பேவரைட் பாடல்களாக இருந்து வருகிறது. 

டிமாண்டி காலனி 2 

 இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். டிமான்டி காலனி முதல் பாகத்திற்கு சற்றும் குறைவில்லாத அளவிற்கு விறுவிறுப்பும் திரில்லிங் சப்ஜெக்டும் சேர்ந்து படம் வெற்றி அடைய உதவியது. இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காதல் திருமணம் 

இயக்குனர்  அஜய் ஞானமுத்து நீண்டகாலமாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தற்போது அவரை பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் முடித்துள்ளார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. சீயான் விக்ரம் உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் விக்ரமுடன் இருக்கும் இவர்களது திருமண போட்டு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவரது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது தொடர்பான திருமண போட்டோக்கள் வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.