டிலைட் சாம்பார்; எலைட்டுக்கும் மட்டுமல்ல; எல்லாருக்குமானதுதான்! சூப்பர் சுவையானதாக இருக்கும்!
டிலைட் சாம்பார் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வேக வைத்த துவரம் பருப்பு – ஒரு கப்
எண்ணெய் – 100 மில்லி லிட்டர்
புளி கரைசல் – முக்கால் கப்
வர மிளகாய் – 6
கடலை பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
உளுந்து – அரை டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்
தூள் வெல்லம் – அரை ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
வர மல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – அரை மூடி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடலை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சாம்பாரில் சேர்க்கவேண்டிய காய்கறிகள்
இளம் முருங்கைக்காய் – 1
பீன்ஸ் – 5
கத்திரிக்காய் – 2
சிவப்பு பூசணி – 10 (சிறிய துண்டுகள்)
சுரைக்காய் – 10 (சிறிய துண்டுகள்)
தக்காளி – 1
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடலை பருப்பு, உளுந்து, சீரகம், நிலக்கடலை, வெந்தயம் என அனைத்து பொருட்களையும் வறுத்துக்கொள்ளவேண்டும்.
இதில் மணம் வந்தவுடன், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வறுக்கவேண்டும். இதை நன்றாக ஆறவைத்து, மிக்ஸியில் சேர்த்து தேங்காய் துருவலுடன் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானவுடன், வெட்டிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து மணம் வர 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், வெல்லத் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி வைத்து வேகவிடவேண்டும். காய்கள் வெந்த பின்னர் அதை கலக்கி புளிக்கரைசல் சேர்க்கவேண்டும். பின்னர் உப்பு கலந்துகொள்ளவேண்டும்.
இதனை 2 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும். பின்னர் வேகவைத்த துவரம் பருப்பை இதில் சேர்த்து நன்றாக கலக்கி, அரைத்த மசாலாவையும், சேர்த்து, மீண்டும் நன்றாக கலக்கவேண்டும்.
அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாகக் கலந்து, சாம்பாரின் நிறம் நன்றாக வரும் வரை கலக்க வேண்டும். நிறம் வந்ததும் இதை 5 நிமிடங்கள் வேகவிடவேண்டும். சாம்பார் கொதித்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, 2 வரமிளகாயை கிள்ளி தாளித்து சாம்பாரில் ஊற்றவேண்டும்.
இதை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவேண்டும். வெங்காயம், பூண்டு இல்லாத ருசியான சாம்பார் இது. சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு இந்த சாம்பாரை சூடாக ஊற்றிச் சாப்பிடவேண்டும். உருளைக் காரக்கறி, அவரைக்காய் பொரியல், அப்பளம், ஊறுகாய் இதெல்லாம் இதற்கு பெஸ்ட் காம்போ.
நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் இந்த எலைட் சாம்பார். இதை கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இந்த ரெசிபியை நீங்கள் கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழங்கள்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்