தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Delicious Mouth Watering Sankara Fish Kulambu

Sankara Fish kulambu : நாக்கில் நீர் சொட்ட வைக்கும் சுவையில் ருசியான சங்கரா மீன் குழம்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 17, 2024 06:00 AM IST

பெரும்பாலானவர்களுக்கு மீன் குழம்பு என்றாலே பிடிக்கும். அதிலும் சங்கரா மீன் என்றாலே தனி ருசிதான். நீங்கள் ஒரே ஒரு முறை இந்த மாதிரி சங்கரா மீன் குழம்பை செய்து பாருங்கள் ருசி அருமையாக இருக்கும்.

நாக்கில் நீர் சொட்ட வைக்கும் சுவையில் ருசியான சங்கரா மீன் குழம்பு
நாக்கில் நீர் சொட்ட வைக்கும் சுவையில் ருசியான சங்கரா மீன் குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

சங்கரா மீன்

வெங்காயம்

தக்காளி

எண்ணெய்

சோம்பு

வெந்தயம்

கறிவேப்பிலை

பூண்டு

தேங்காய்

மஞ்சள் தூள்

குழம்பு மிளகாய் தூள்

புளி

செய்முறை

முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயை சூடாக்கி அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அரை ஸ்பூன் வெந்தயத்தை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் சோம்பு தூளை சேர்க்க வேண்டும். சோம்பு பொரிந்த பிறகு அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும் . பின்னர் அதில் 200 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கி வரும் போது அதில் இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். 

தக்காளி வதங்கிய பின் பெரிய எலுமிச்சை அளவு புளியை கரைத்து வடித்த தண்ணீரை சேர்க்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இரண்டு பத்தை தேங்காயை மிக்ஸியில் ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதில் ஒரு ஸ்பூன் சோம்பை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 5 பல் பூண்டு மற்றும் 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த தேங்காயையும் குழம்பில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்த கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்து வற்றிய பிறகு அதில் மீன் துண்டுகளை சேர்க்க வேண்டும். மீன் வெந்த பிறகு அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய்யை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவு தான் ருசியான சங்கரா மீன் குழம்பு ரெடி.

சூடான சாதம், இட்லி, தோசைக்கு இந்த மீன் குழம்பு அட்டகாசமான காமினேஷன். ஒரு முறை செய்து தந்தால் மீண்டும் மீண்டும் செய்து தர சொல்லி உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்