அசத்தும் சுவையான அவல் பாயாசம்! தித்திக்கும் தெவிட்டாத இன்பம் தரும்! வீட்டு விசேஷங்களை குஷிப்படுத்தும்!
அவல் பாயாசம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
அவல் – 200 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
காய்ச்சிய பால் – கால் லிட்டர்
அச்சு வெல்லம் – 400 கிராம்
முந்திரிப்பருப்பு – 10
உலர் திராட்சை – 10
நெய் – இரண்டு கிண்ணம்
செய்முறை
அவல், ஜவ்வரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியாக ஒரு டம்ளர் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானவுடன், முந்திரி பருப்பு, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும்.
பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சிக்கொள்ளவேண்டும். அதை வடிகட்டிக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவேண்டும்.
ஜவ்வரிசி வெந்ததும் அதனுடன் ஊற வைத்த அவலும், அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்து 10 நிமிடம் வேக விடவேண்டும். அவல் வெந்த்ததும் பாகை ஊற்றவேண்டும். பாகு சேர்த்து வரும்போது காய்ச்சிய பால், முந்திரி திராட்சை, ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவேண்டும்.
மேலும் ஒரு வித்யாசமான டிஷ்ஷையும் கற்றுக்கொள்ளுங்கள்.
புளிதான் ரசத்தின் அடிநாதமே, ஆனால் புளி இல்லாமல் கூட ரசம் வைக்க முடியும். புளி இல்லாமல் ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
தக்காளி பழம் – 2
கட்டிப்பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
வரமல்லி – 2 ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வர மிளகாய் – 2 (கிள்ளி சேர்க்கவேண்டும்)
செய்முறை
தக்காளி பழங்களை நறுக்கிக்கொள்ளவேண்டும். மஞ்சள்தூள், பெருங்காயம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் தக்காளி பழங்களுடன் நன்றாக கொதிக்கவிடவேண்டும். தக்காளி வெந்தவுடன் அந்த தண்ணீரில் அப்படியே அவற்றை மசித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
மற்றொரு கடாயில் நெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு, வரமல்லி, மிளகு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக சீரகம், தேங்காய்த் துருவல், வரமிளகாய் சேர்த்து கலந்து இறக்கி, ஆறவைத்து இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த மசாலாவை வெந்துகொண்டிருக்கும் தக்காளி கலவையில் சேர்த்து, உப்பு மேலும் தண்ணீர் ஊற்றி நன்றாக நுரை கட்டி வரும்வரை கொதிக்கவிடவேண்டும். கொதி வந்தவுடன் மல்லித்தழையை சேர்க்கவேண்டும்.
தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து சூடானவுடன் கடுகு, உளுந்து, கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு எடுத்து ரசத்தில் சேர்த்தால், சூப்பர் சுவையான புளி இல்லாத ரசம் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த ரசத்துக்கு அப்பளம், ஊறுகாயே போதுமானது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்