விக்ரம் படத்திற்கு வந்த சோதனை! வீர தீர சூரன் வெளியிட இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விக்ரம் படத்திற்கு வந்த சோதனை! வீர தீர சூரன் வெளியிட இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?

விக்ரம் படத்திற்கு வந்த சோதனை! வீர தீர சூரன் வெளியிட இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?

Suguna Devi P HT Tamil
Published Mar 26, 2025 08:49 PM IST

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து நாளை (27/03/2025) வெளியாக இருந்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் படத்திற்கு வந்த சோதனை! வீர தீர சூரன் வெளியிட இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
விக்ரம் படத்திற்கு வந்த சோதனை! வீர தீர சூரன் வெளியிட இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?

விக்ரமின் சிறப்பு படம்

விக்ரமின் 62 ஆவது படமாக வீரதீரசூரன் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் இது முழுக்க ஆக்சன் திரில்லர் கதைகளமாக இருக்கும் என கூறப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு விக்ரமிற்கு தங்கலான் படம் வெளியாகி சிறப்பான பெயரை பெற்று தந்தது. இந்த வரிசையில் இந்த வருடமும் இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக வரலாம் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக விக்ரம் கருதப்படுகிறார். இவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் நியாயம் சேர்க்கும் வகையில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவார். இதன் காரணமாகவே இவருக்கு தேசிய விருது, தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளன.

பின்னணி என்ன

வீர தீர சூரன் படத்தை பி4 மீடியா மற்றும் எஸ் ஆர் பிக்சர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்து எழுந்த பிரச்சனையில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பி4 மீடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நாளை காலை 10:30 மணி வரை வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்நிலையில் நாளை காலை 9 மணி காட்சிக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு அனுமதி வழங்கி இருந்தது. இதனால் 9 மணி காட்சிக்கு முன்பதிவு செய்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்/பொருள்/ உள்ளடக்கம் ஆகியவை அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து எடுத்து வழங்கப்பட்டவையாகும். இது வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதில் உள்ளதை பயன்படுத்திக் கொள்வது பயனாளரின் தனிப்பட்ட பொறுப்பாகும்.