தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Deforestation : இந்தியா எந்த விஷயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதென்று பாருங்கள்? அதிர்ச்சியடைவீர்கள்!

Deforestation : இந்தியா எந்த விஷயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதென்று பாருங்கள்? அதிர்ச்சியடைவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 19, 2024 05:12 PM IST

Deforestation : காடுகளை அழிப்பதில் உலகளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

Deforestation : இந்தியா எந்த விஷயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதென்று பாருங்கள்? அதிர்ச்சியடைவீர்கள்!
Deforestation : இந்தியா எந்த விஷயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதென்று பாருங்கள்? அதிர்ச்சியடைவீர்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில்,6,68,400 எக்டேர் பரப்பு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் காடழிப்பு அதிகமாக நடந்துள்ளது. (6,68,400 எக்டேர் பரப்பு) காங்கிரஸ் மற்றும் பாஜன ஆகிய இரண்டு அரசுளிலும், இது நடந்துள்ளது. தமிழகத்திலும் சுற்றுச்சூழல் தரக்குறியீடுகள் மிகவும் மோசமாக உள்ளது.

தமிழகத்தில் 2010ல் 906 kha வனப்பரப்பு (7.7 சதவீதம்) இருந்தது, 2023ல்,1.52 kha பரப்பு அழிந்துள்ளது.

2002-2021 இடைப்பட்ட காலத்தில் தமிழக வனப்பரப்பு 1.3 சதவீதம் குறைந்துள்ளது.

2001-2023 இடைப்பட்ட காலத்தில், 30.1 kha மரங்களின் பரப்பு தமிழகத்தில் அழிந்துபோயுள்ளது. (2.4 சதவீதம் இழப்பு)

2013-23 இடைப்பட்ட காலத்தில் தமிழக இயற்கைக் காடுகளில் உள்ள 69 சதவீதம் மரங்களின் பரப்பு (Tree Cover) அழிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான கழிவுகளை அல்லது தலைக்கு (Hazardous Waste) உருவாக்குவதில் (2018), தமிழகம் மொத்தமுள்ள 28 மாநிலங்களில், மிக மோசமான 25ம் இடத்தில் (17.26 மதிப்பு குறியீடு) உள்ளது.

1,000 பேருக்கு, பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியிலும், தமிழகம் 2018-19ல் 5.32 மதிப்பு குறியீட்டை பெற்று, மொத்தமுள்ள 30 மாநிலங்களில் 28வது இடத்தில் உள்ளது.

புதைபடிம எரிபொருள் பயன்பாட்டிலும், தலைக்கு 2018-19ல் 199.9 மதிப்பு குறியீட்டைப் பெற்று, 30 மாநிலங்களில் மோசமான 22ம் இடத்தில் உள்ளது.

சுத்தம் மற்றும் சுகாதாரக் குறியீட்டிலும், தமிழகம் பலவற்றில் சாதித்திருந்தாலும், மக்கள் பயன்படுத்தும் சுத்தம் மற்றும் சுகாதாரப் பொருள் பயன்பாட்டிலும் (Improved Sanitation Facility) தமிழகம் தன்னை மேலும் வளப்படுத்த வேண்டிய சூழலில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பரந்தூர் விமானநிலைய விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தால் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகனாபுரம் கிராமம் அதன் வரைபடத்தில் இருந்து காணாமல் போகும்.

ஏகனாபுரம் கிராமத்தில் கடந்த 650 நாட்களுக்கு மேலாக, அரசிற்கு எதிராக- பரந்தூர் விமானநிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் விவசாய நிலப்பகுதியில் ஏக்கருக்கு 2.5 டன் நெல் அறுவடை செய்ய முடியும் என்றும், (இது தஞ்சை காவேரிப் பகுதியில் விளையும் நெல்லைக் காட்டிலும் அதிக விளைச்சல் என்றும் கூறுப்படுகிறது)

80 கிலோ நெல் மூட்டை ரூ.1,500 க்கு விற்பனை ஆவதாகவும் தெரிவித்து, நாங்கள் ஏன் இந்த விவசாய நிலத்தை விட்டு, எனது விருப்பமின்றி, விமான நிலைய விரிவாக்கத்திற்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் பகுதி பச்சைபசேலென்று இருப்பதாகவும், அங்குள்ள விவசாயிகள் கிணறுகள், ஆழ்துளைக் குழாய்கள் துணையின்றி விவசாயத்தை எளிதில் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள ஏரிகள் மற்றும் நீர்ப்பாசன குளங்களில் இருந்து நீரை பயன்படுத்தி, வெயில் காலத்திலும் மண்ணில் உள்ள ஈரப்பதம் குறையாமலும், நிலத்தடிநீர் குறையாமலும் விவசாயத்தை செழிப்புடன் செய்து வருகின்றனர்.

அரசின் திட்டப்படி, 2 விமானநி லைய ஓடுபாதைகள் ஏரிகளின் நடுவே வந்தால், அதனால், 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதாகவும், விமானநிலையம் வந்தால் ஏகனாபுரத்தில் மட்டும் 905 ஏக்கர் அழியும் என்றும், இது தமிழக அரசு மக்களை வலுக்கட்டாயமாக பிற இடங்களுக்கு துரத்தி அனுப்புவதற்கு சமம் என விவசாயிகள் வருந்துகின்றனர்.

பரந்தூருக்கு பதிலாக, திருப்போரூர், பன்னூர் பகுதிகளில் விமான நிலையம் அமைக்க முடியும் (அங்கு மக்கள்தொகை மற்றும் விவசாய நிலம் குறைவு) என்பதை அரசு ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது?

பரந்தூர் விமானநிலைய விரிவாக்கத்திற்கு, அரசு 13 கிராமங்களில் உள்ள 5,369 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதில், 47 சதவீத நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாய நிலங்கள், 16 சதவீத உலர்ந்த விவசாய நிலங்கள், 27 சதவீத நீர்நிலைகள் (நீர்ப்பாசன குளங்கள்).

தமிழகத்தின் மற்ற விமான நிலையங்களை (திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி) ஆகியவற்றை மேம்படுத்தாமல், மக்கள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் தீர்மானம் போன்ற எதிர்ப்புகளை மீறி, ரூ.32,705 கோடியில், 4 கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டுவதை கைவிடுவது நல்லது.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்