Deepavali Special Sweet : தீபாவளி ஸ்பெஷல்! மோத்திசூர் லட்டு! – கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Deepavali Special Sweet : தீபாவளி ஸ்பெஷல்! மோத்திசூர் லட்டு! – கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்!

Deepavali Special Sweet : தீபாவளி ஸ்பெஷல்! மோத்திசூர் லட்டு! – கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 11, 2023 06:30 AM IST

Deepavali Special Sweets : சுவையான மோத்திசூர் லட்டு செய்து இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள். உங்கள் வீட்டு தீபாவளி மேலும் இனிக்க ஹெச்.டி தமிழ் தீபாவளி பலகாரங்களின் செய்முறையை தினமும் பகிர்ந்து வருகிறது. அந்த வரிசையில் இன்று மோத்திசூர் லட்டு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

Deepavali Special Sweet : தீபாவளி ஸ்பெஷல்! மோத்திசூர் லட்டு! – கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்!
Deepavali Special Sweet : தீபாவளி ஸ்பெஷல்! மோத்திசூர் லட்டு! – கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்!

விர்ஜின் ஆலிவ் எண்ணெய் – 2 கப்

பேக்கிங் சோடா - 2 சிட்டிகை

ஃபுட் கலர் – அரை ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி – அரை ஸ்பூன்

சர்க்கரை – 3 கப்

தண்ணீர் – 2 கப்

செய்முறை

பூந்தி மாவு தயாரிப்பது எப்படி?

இந்த இந்திய இனிப்பை செய்வதற்கு, பெரிய பாத்திரத்தில் இரண்டரை கப் கடலை மாவை சேர்க்க வேண்டும். அதனுடன் ஆரஞ்சு நிற ஃபுட் கலரை சேர்க்க வேண்டும். நன்றாக கலந்து, சிறிது நீர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். கட்டியில்லாமல் நல்ல மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

பூந்தி தயாரிப்பது எப்படி?

ஒரு அகன்ற கடாயில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, எண்ணெய் நன்றாக சுட்டவுடன் ஒரு ஜல்லி கரண்டியை அதன் மேல் வைத்து மாவை அதன் வழியாக தேய்த்துவிடவேண்டும். மாவு சிறுசிறு உருண்டைகளாக எண்ணெயில் விழுந்து பொரிந்து வரும். எப்போதும் மிதமான தீயை வைக்க வேண்டும். பூந்தி பொரிந்தவுடன், அதை அரித்து ஒரு எண்ணெய் வடிகட்டியில் வைக்க வேண்டும்.

சர்க்கரை பாகு தயாரிப்பது எப்படி?

ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சமஅளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இரண்டு கம்பி பதம் வரும் வரை அது நன்றாக கொதிக்க வேண்டும். அதில் ஏலக்காய் சேர்த்து, பொரித்து வைத்துள்ள பூந்தியையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். அடுப்பை அணைத்து மூடிவைத்துவிடவேண்டும்.

லட்டு பிடிப்பது எப்படி?

உங்கள் கைகளில் நெய்யை தடவிக்கொண்டு, குட்டி, குட்டி உருண்டைகளாக லட்டு பிடிக்கத்துவங்கிவிடுங்கள். அதை ஒரு தட்டில் அடுக்கி வைத்து அதில் பொடித்த நட்ஸ்களை தூவிவிடுங்கள். சுவையான மோத்தி லட்டு சாப்பிட தயாராகிவிட்டது. இந்த லட்டு உங்கள் தீபாவளியை மேலும் இனிப்பாக்கும்.

குறிப்புகள்

லட்டுவுக்கு உங்களுக்கு பிடித்த மற்றும் அனைத்து வகை நட்ஸ்களையும் பயன்படுத்தலாம். அது அந்த லட்டின் சுவையை மேலும் அதிகரித்துக்கொடுக்கும்.

மோத்திசூர் லட்டின் மாவு கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.

பூந்தியை நெய்யில் பொரித்து எடுத்தால் இன்னும் சுவை அதிகம் இருக்கும். ரீபைண்ட் எண்ணெய் கூட நீங்கள் உபயோகிக்கலாம்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.