Deepavali Special Sweet : செட்டிநாடு கருப்பட்டி பணியாரம் – தீபாவளிக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இனிப்பு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Deepavali Special Sweet : செட்டிநாடு கருப்பட்டி பணியாரம் – தீபாவளிக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இனிப்பு!

Deepavali Special Sweet : செட்டிநாடு கருப்பட்டி பணியாரம் – தீபாவளிக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இனிப்பு!

Priyadarshini R HT Tamil
Oct 16, 2023 08:00 AM IST

Deepavali Special Sweet : செட்டிநாடு கருப்பட்டி பணியாரம். தீபாவளிக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இனிப்பு. வித்யாசமான சுவையில் ஆளை அள்ளும்.

Deepavali Special Sweet : செட்டிநாடு கருப்பட்டி பணியாரம் – தீபாவளிக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இனிப்பு!
Deepavali Special Sweet : செட்டிநாடு கருப்பட்டி பணியாரம் – தீபாவளிக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இனிப்பு!

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

கருப்பட்டி – அரை கப் அல்லது பனைவெல்லம்

சுக்குப்பொடி – 2 சிட்டிகை

ஏலக்காய்ப்பொடி – கால் ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

அரிசியை நன்றாக அலசி தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துண்டில் அதை காய வைக்க வேண்டும். முற்றிலும் காய்ந்துவிடக்கூடாது, அது சிறிதளவு ஈரப்பதத்துடனேயே மிக்ஸி ஜாரில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்மாக சேர்த்து எடுத்து அரைக்க வேண்டும். சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். கட்டிகள் இல்லாமல் சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருப்பட்டியை பொடித்து, ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் சிறிது நேரம் வைத்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தூசியில்லாமல் வடித்து ஆறவிடவேண்டும்.

(வெல்லம் அல்லது கருப்புட்டியை சேர்க்கும்போது நாம் இவ்வாறு செய்வது அவற்றில் உள்ள தூசியை நீக்கவும், இனிப்பு அனைத்து பகுதிகளுக்கும் பரவவும் உதவுகிறது)

பொடி செய்து வைத்துள்ள அரிசி மாவை, முக்கால் பகுதி கருப்பட்டி பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவாக பிசைந்துகொள்ள வேண்டும்.

மாவை ஒரு நாள் புளிக்கவைக்க வேண்டும். பின்னர் எடுத்து எஞ்சிய கருப்பட்டி பாகை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதில் ஏலக்காய்ப்பொடி, சுக்குப்பொடி அனைத்தும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு பிடிக்கும் என்றால் தேங்காய் மற்றும் கருப்பு எள்ளை நெய்யில் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்.

அனைத்தையும் மாவில் கலந்து, பணியாரக்கல்லில் சிறு சிறு பணியாரங்களாக வார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் தாராளமான எண்ணெய் சூடாக்கி அப்பம்போல் செய்தும் எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்ததுபோல் இரண்டு முறையிலும் சுட்டு எடுத்துக்கொள்ளலாம். 

குறிப்புகள்

மாவை ஓரிரவு புளிக்க வைப்பது மிகவும் அவசியம்.

ஓரங்களில் மொறுமொறு தன்மையுடனும், நடுவில் மிருதுவாகவும் வெந்து வரவேண்டும்.

கருப்பட்டிதான் இதற்கு சுவை கொடுப்பதே. எனவே அதற்கு பதில் வேறு எதுவும் சேர்த்துவிட வேண்டாம்.

மாவு, கருப்பட்டி பாகு என அனைத்தையும் முந்தைய நாளே செய்து வைத்துவிடலாம்.

ரெடிமேடாக கிடைக்கும் மாவை பயன்படுத்தும்போது கவனம் தேவை. அது சுவையாக இருக்குமா என தெரியாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.