தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Deepa: 'சாப்பாட்டுக்கு வழி இல்லாம குழந்தையை அனுப்பி வெச்சேன்' தீபா கண்ணீர் பேட்டி!

Deepa: 'சாப்பாட்டுக்கு வழி இல்லாம குழந்தையை அனுப்பி வெச்சேன்' தீபா கண்ணீர் பேட்டி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 28, 2024 05:40 AM IST

என் குழந்தை பிறந்தப்ப அத வாங்க கூட யாரும் இல்ல. குழந்தை பிறந்த 16 நாள் தெரிஞ்சவங்க வீட்டுலதா போய் இருந்தோம். அவங்க அந்த குழந்தைய எப்படி பார்த்துகிட்டாங்க எப்படி குளிக்க வைக்குறாங்க பார்த்துட்டு 17 ஆவது நாள்ல இருந்து நானே குளிக்க வச்சே. அப்ப எனக்கு 17 வயசு இருக்கும்.

சின்னத்திரை நடிகை தீபா
சின்னத்திரை நடிகை தீபா

சின்ன திரையில் அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் பிரியமான தோழி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை தீபா. இவர் சமீபத்தில் கலாட்டா பிங்க் சேனலுக்கு கொடுத்த பேட்டி நேற்று வெளியாகி உள்ளது. அதில் அவர் தனது வாழ்வில் நடந்த பல துயரங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் சீரியல் படம் இரண்டையும் எப்படி பேலன்ஸ் பண்ணீங்க என்ற கேள்விக்கு, "தெரியல. பழகிடுச்சு ரெம்ப வருசமா இருப்பதால் நான் மேனேஜ் பண்ணிடுவேன். நமக்கு ஒரு கனவு இருக்கும்ல. சின்னதிரையில் ஒரு பேர் எடுத்துட்டோம் தீபானா எல்லார்க்கும் தெரியும். அந்த மாதிரி பெரிய திரையிலும பேர் வாங்கணும் எனறால் நம்ம வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும்போதே பண்ணும். 

அதனால் என் சீரியல் கேரியர் சினிமா கேரியர் இரண்டும் ஒன்றை ஒன்று பாதிச்சுடாம பார்த்துக்கிட்டேன் என்றார். நான் ரெம்ப சின்ன வயதிலேயே நடிக்க வந்துட்டேன். ரோட்டுல விளையாடிகிட்டு இருந்தப்போ வெங்கட் பிரபு சாரின் வசந்தம் வந்தாச்சு படத்தில் நடிக்க கூப்டாங்க. அந்த படத்தோட தயாரிப்பாளர் கடை முன்னாடி நா விளையாடிக்கிட்டு இருக்குறத பார்த்துட்டு இந்த பொண்ணு யாரு.ரெம்ம துறுதுறுன்னு இருக்கே நடிக்க வப்பாங்களான்னு கேட்டாங்க.. அப்பறம் அந்த கடைல இருக்க அங்கிள் எங்க அம்மாகிட்ட வந்து கேட்டாங்க தீபாவ நடிக்க கூப்பிடுறாங்கன்னாங்க. எங்க அம்மாவுக்கு ஆசை நம் பிள்ள டிவில வரும்னு. அப்படி வந்த வாய்ப்பு தான் என்கிறார்.

நா ரெம்ப சின்ன வயசில் முதல் கல்யாணம் பண்ணிட்டேன். ரெம்ப தப்பான வயசுல, தப்பான ஆள, தப்பான நேரத்தில் கல்யாணம் பண்ணிட்டே. அது எனக்கு ரெம்ப தப்பான வாழ்க்கைதான். என் விருப்பத்தின் பேர்ல தா கல்யாணம் நடந்தது எங்க வீட்டில ஒத்துக்கல. யார் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க. அந்த தப்புல ஒரு முத்துதா என் பையன். சிப்பிக்குள் முத்து மாதிரி ஒரு கெட்டதுல எனக்கு கிடைச்ச கடவுள் கொடுத்த ஒரு பொக்கிஷம்னு நினைச்சுக்கிட்டேன்.

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் கல்யாணம் ஆனப்பறம் உடனே நா கன்சீவ் ஆகிட்டேன். பத்து மாசத்தில் என் பையன் பிறந்துட்டான். அதுக்கப்பறமும் சினிமாதா என்ன கைவிடல. இப்பவரைக்குமே என்னுடைய கலைத்தாய் என்னை கை விடல. அந்த டைம்ல ரெம்ம கஷ்டப்பட்டோம்.

நா எங்க வீட்டில் ஒரே பொண்ணுன்றதால் ரெம்ப செல்லம். கஷ்டம்னா என்னனே தெரியாது. அந்த வயசில் நா என்ன கேட்டாலும் வாங்கி குடுப்பாங்க. நா என்ன சாப்பிடணும்னு ஆசைப்படுறனோ வாங்கி குடுப்பாங்க. பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு கூட இவ்வளவு டிரஸ் பண்ணிருப்பாங்களான்னு தெரியாது. ஒரு ஒரு பெஷ்டிவல்க்கும் எனக்கு டிரஸ் இருக்கும். என் பிறந்தநாளுக்கு அந்த டைம்லயே 100 ரூபாய் குடுப்பாங்க. அப்படி வளர்ந்துட்டு கல்யாணத்துக்கு அப்பறம் 16 வயசுல நா பண்ண தப்பு அப்படியே என் வாழ்க்கைய புரட்டி போட்டுச்சு.

இப்ப வர நா பீல் பண்றே. என் பையனுக்கு இப்ப வயசு 15 ஆகுது. நா எப்படி ஒரு பாப்பாவ வயித்துல வச்சுருந்தே.. நா எப்படி அந்த குழந்தைய பெத்தேன். அத எப்படி வளர்தேன் என்று எனக்கு இப்ப வர நியாபகம் இல்ல.

நா கர்ப்பமா இருக்குறப்பயே கஷ்டம் தா. ரேஷன் அரிசி வாங்கி குடுப்பார். எனக்கு அந்த ஸ்மெல் பிடிக்காது அப்படியே குமட்டும். நிறைய பேர் அத சாப்டுறாங்க. அவங்க சாப்பிடுறதா நா தப்பு சொல்லமாட்டேன். அந்த இயலாமையில் அவங்க சாப்பிடுறாங்க. புதுசா சாப்பிடுறவங்களுக்கு அது ரெம்ப கஷ்டமாதா இருக்கும். என் குழந்தை பிறந்தப்ப அத வாங்க கூட யாரும் இல்ல. குழந்தை பிறந்த 16 நாள் தெரிஞ்சவங்க வீட்டுலதா போய் இருந்தோம். அவங்க அந்த குழந்தைய எப்படி பார்த்துகிட்டாங்க எப்படி குளிக்க வைக்குறாங்க பார்த்துட்டு 17 ஆவது நாள்ல இருந்து நானே குளிக்க வச்சே. அப்ப எனக்கு 17 வயசு இருக்கும்.

அந்த டைம்லயும் அத்திப்பூக்கள் சீரியல்ல நா பிரண்ட் கேரக்டர்ல நடிச்சுட்டு இருந்தேன். அதனால் அந்த சீரியலில் குழந்தை கேரக்டர் வேணும் என்பதால் என் குழந்தையை நடிக்க அனுப்பினேன்.

நடிக்க வைக்கணும்ன்றதுக்காக இல்ல. எங்களுடைய இயலாமை.. வேற வழி இல்லாம.. நா என் குழந்தையை நடிக்க அனுப்பினேன். 2 மாச கை குழந்தைய சூட்டிங் அனுப்பி அவனுடைய காசுலதா நாங்க சாப்டது. அவ்வளவு கஷ்டம் அந்த குழந்தை அழும்போது எல்லாம் எனக்கு உள்ள அப்படியே பதறும் என்றார்.

அந்த நேரத்தில் என் அப்பா அம்மாவோட கோபம் நியாயம்னு இப்போ தோணுது. கல்யாணம் நடந்து 3 ஆவது நாள் நா பண்ணது தப்புன்னு தெரிய வந்தது. போலீஸ் பிரச்சனை எல்லாம் வந்தப்ப என்ன அடிச்சு தாலி எல்லாம் அறுத்து போடின்னு துரத்தினார். ஆனா நா வந்துட்டே வாழணும்னு இருந்தேன். நா ரெம்ம கஷ்டப்பட்டேன். பீஸ் கட்ட முடியாம என் பையன ஸ்கூல்ல இருந்து அனுப்பிட்டாங்க.

நா படிக்கல 10 ஆவது முடிக்குறப்பயே வீட்ட விட்டு வந்துடே. பெரிசா படிப்பு அறிவு இல்ல. உலக அறிவு மட்டும் தா நமக்கு. வாழ்க்கையோட பாடம் தான் எனக்கு அதிகம். நா முதல் திருமண வாழ்க்கையில் இருந்து வெயில் வரும்போது அந்த வீட்ட காலி செய்ய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால அந்த ஓனர் கூட பிரச்சனை. 

அப்ப எனக்கு 23 வயது என் பையனோட ரோட்டில் நின்னேன். என் பையனுக்கு 4500 பீஸ் கட்ட முடில. அப்ப நினைச்சேன். என் பையன் படிக்கணும் நா படிச்சுருந்தா 30 ஆயிரத்துக்கு நா ஒரு வேலைக்கு போயிருந்துக்கலாம். நா ரோட்டுல நின்னமாதிரி என் பையன் எந்த காரணத்த கொண்டும் ரோட்டுல நின்றவே கூடாது. அப்பா ஒருத்தன் இருந்ததுருந்தா கூட நம்ம லைப் இப்படி இருந்துக்காதுன்னு என் பையன் ஒரு நாள் நினைக்கனும் என்று நினைச்சேன். இப்ப அத ஒரு அளவுக்கு கொண்டு வந்துடேன்.

நா சீரியல்ல கூட வேலை பாக்குறவங்க கூட ரெம்ப குளோஸ் ஆ இருக்க மாட்டேன். நல்லா ஜாலியா இருப்பேன். விளையாடுவோம். டபுள் மீனிங்ல பேசுறது எல்லாம் தப்பா தெரியல. இந்த இண்டஸ்டிரில ப்ரண்ட்லியா போசுறோம். ஆனா என் லிமிட்ட கிராஸ் பண்ணமாட்டேன் என்றார். என்கிட்ட மிஸ் பிகேவ் பண்ணவங்க இருக்காங்க. அவங்கள 4 அர விட்டு, செருப்பால அடிச்சு அப்படி எல்லாம் இருக்கு. என்ன டச் பண்ண அலோ பண்ணுவே. அது தப்பா இருக்கும் பட்சத்தில அனுமதிக்க மாட்டேன் என்றார்.

என் அம்மா நா கார் வாங்கணும்னு ஆசப்பட்டாங்க. ஆனா அவங்க இறந்த பிறகுதான் கார் வாங்குனேன். என் அம்மாவ ரெம்ப மிஸ் பண்றேன்.

என் பையன் அப்பா எல்லோரும் எனக்கு இரண்டாவது திருமணம் நடக்கணும்னு ஆசைப்பட்டாங்க. ஒரு துணை வேணும்னு நினைச்சாங்க என் பையனும் நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க அம்மா என்றார். அப்படிதான் எனக்கு இரண்டாவது கல்யாணம் நடந்தது என்றார். இவ்வாறு தனது தனிபட்ட வாழ்வில் நடந்த பல விஷயங்களை மன்ம் திறந்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: Galatta Pink