Breast Milk Secretion: அட.. கர்ப்பம் தரிக்காமல், குழந்தை பிரசவிக்காமல் மார்பகங்களில் பால் சுரக்குதா.. இது என்ன புது கதை!
Breast Milk Secretion: இயற்கையில் கர்ப்ப பைக்கும் பால் சுரப்பிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிட்யூட்டரி சுரப்பியியை தூண்டும் வகையில் சில மருந்துகள் எடுத்துக் கொள்ள நேர்ந்தால் பால் சுரக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
ஃபெண்களுக்கு எப்போதும் சில நேரங்களில் வித்தியாசமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது ஒரு வித்தியாசமான புதுவிதமான பிரச்சினை. இன்றைய சூழலில் கர்ப்பம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு மார்பகங்களில் பால் கசிந்து வருகின்ற பிரச்சினை பரவலாக உள்ளது. இது இயற்கைக்கு மாறான விசயம். பொதுவாக கர்ப்ப காலம் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் காலத்தில் மட்டும் இருக்கக்கூடிய பால் சுரப்பு என்பது, கர்ப்பம் ஆகாமல் பால் சுரப்பதன் காரணம் என்ன என்று பார்க்கலாம்.
இது என்ன புது கதையாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா. காரணம் கேட்டால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதை மாதிரி இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
மார்பகங்களின் வளர்ச்சிக்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் பிட்யூட்டரி சுரப்பி காரணமாக உள்ளது. இயற்கையில் கர்ப்ப பைக்கும் பால் சுரப்பிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிட்யூட்டரி சுரப்பியியை தூண்டும் வகையில் சில மருந்துகள் எடுத்துக் கொள்ள நேர்ந்தால் பால் சுரக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். உடலில் உள்ள ஹார்மோன் சமநிலை மாறும் போது சரி செய்ய வழங்கும் மருந்துகள் கூட காரணமாக இருக்கலாம். கருத்தடை மாத்திரை நீண்ட காலம் எடுப்போருக்கும் கருக்கலைப்பு செய்து இருப்பவர்களுக்கும் இந்த மாதிரி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
குறிப்பாக பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹைப்போதாலமஸ் என்று சொல்லக்கூடிய பகுதிக்குமான தொடர்பில் பாதிப்பு வரும் போது இந்த மாதிரி பால் சுரக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு போல் தைராய்டு சுரப்பி பாதிப்பு ஏற்படும் போதும் இந்த மாதிரி பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது இந்த மாதிரி பிரச்சினைகள் ஏற்படும். பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு புரோலேக்டின் என்ற ஹார்மோன் சுரக்கும் போது தான் பால் உற்பத்தி ஆகிறது. மேலே சொல்லப்பட்ட புரோலக்டின் என்ற ஹார்மோன் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கூடுதலாக சுரப்பதன் மூலம் பால் உற்பத்தி உருவாவது இயல்பாக நடக்கிறது. இவ்வாறு பால் இயல்பாக உற்பத்தி ஆவதை கேலக்டோரியா என்று சொல்கிறோம்.
பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை மாறும் போதும் மாதவிடாய் சுழற்சி என்பது முறையற்று இருப்பதை சரி செய்யவும் கர்ப்பம் ஆகாமல் தடுக்க பல கருத்தடை மாத்திரைகளையும் தேவையற்ற கர்ப்பம் கலைக்கும் போதும் மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சில மருந்துகள் புரோலாக்டின் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த அளவு அதிகரிக்கும் போது மார்பகங்களில் பால் கசிந்து வருகின்ற பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மாதிரியான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி நீண்ட காலம் எடுக்கும் போதும் சுயமாக தாங்களே எடுத்துக் கொள்ளும் போது இந்த மாதிரி பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பொதுவாக இந்த மாதிரியான ஒரு சூழலில் பெண்கள் வெளியே சொல்ல தயங்குவதோடு தேவையற்ற மனக்கவலை மற்றும் மனக்குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். இது போன்ற நிலை வரும் நிலையில் நாம் உடனடியாக மகளிர் நலம் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் சரியான தீர்வாக இருக்கும். பால் சுரக்கும் சுரப்பிகள் புரோலாக்டின் அதிகரிப்பு காரணமாக நிகழக்கூடிய சாதாரண விஷயம் தான் என்பதையும் கர்ப்பப்பைக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். அவற்றைப் பின்பற்றும் முன் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்