தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Dates Apple Payasam Super Delicious Dates Apple Payasam A Sweet That Kids Will Love

Dates Apple Payasam : சூப்பர் சுவையான பேரீட்சைப்பழ ஆப்பிள் பாயாசம்! குழந்தைகள் குதூகலிக்கும் இனிப்பு!

Priyadarshini R HT Tamil
Feb 20, 2024 11:37 AM IST

Dates Apple Payasam : சூப்பர் சுவையான பேரீட்சைப்பழ ஆப்பிள் பாயாசம்! குழந்தைகள் குதூகலிக்கும் இனிப்பு!

Dates Apple Payasam : சூப்பர் சுவையான பேரீட்சைப்பழ ஆப்பிள் பாயாசம்! குழந்தைகள் குதூகலிக்கும் இனிப்பு!
Dates Apple Payasam : சூப்பர் சுவையான பேரீட்சைப்பழ ஆப்பிள் பாயாசம்! குழந்தைகள் குதூகலிக்கும் இனிப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

பால் - ஒரு லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது

வறுத்த சேமியா – 3 ஸ்பூன்

பேரீட்சைப்பழம் நறுக்கியது – ஒரு கப்

முந்திரி பருப்பு – ஒரு கப்

திராட்சை – ஒரு கப்

சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்

ரோஸ் எசன்ஸ் – 2 சொட்டு

நெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, நறுக்கிய பேரீட்சைப்பழம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து கொள்ளவேண்டும்.

அடுத்து ஆப்பிள் தோலை நீக்கி துருவி கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி துருவிய ஆப்பிளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவேண்டும். பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து விடவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி, வறுத்த சேமியாவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவேண்டும்.

பின்னர் சர்க்கரை, ஏலக்காய் தூள், வேகவைத்த ஆப்பிள் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவேண்டும்.

2 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கலந்து விடவேண்டும். பின்னர் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவேண்டும்.

இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பேரீட்சைப்பழம் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவேண்டும்.

சுவையான பேரீட்சைப்பழ, ஆப்பிள் பாயாசம் தயார்.

பேரிட்சையின் நன்மைகள்

ஒரு கப் பேரிட்சை பழத்தில் 277 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட் 75 கிராம், நார்ச்சத்துக்கள் 7 கிராம், புரதம் 2 கிராம், பொட்டாசியம் 15 சதவீதம், மெக்னீசியம் 13 சதவீதம், காப்பர் 40 சதவீதம், மாங்கனீஸ் 13 சதவீதம், இரும்புச்சத்து 5 சதவீதம், இரும்புச்சத்து 15 சதவீதம் உள்ளது.

பேரிட்சை பழத்தை கரோட்டினாய்ட்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் ஃபினோலின்க் அமிலங்கள் ஆகிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்களை குறைக்கிறது.

குடலுக்கு தேவையான நல்ல நுண்ணுயிர்கள் வளர்வதற்கு உதவுகிறது.

நீரிழிவு நோயை சமாளிக்க உதவுகிறது.

வீக்கத்தை குறைக்கிறது.

சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ஆண்மையை அதிகரிக்கிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது.

நரம்பு மண்டலத்து நன்மையளிக்கிறது.

பேரிட்சை பழங்கள், உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் மற்றும் தாவர உட்பொருட்கள், செரிமானம், மூளை இயக்கம், இதய ஆரோக்கியம், கர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு உதவுகிறது.

பேரிட்சை பழங்களை அப்படியே நேரடியாக சாப்பிடலாம் அல்லது இதுபோல் பாயாசம் போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம். இதை சாலட்கள், இனிப்புகள், ஸ்னாக்ஸ்களில் சேர்த்து சாப்பிடலாம். இதை உணவுகளில் சேர்க்கும்போது, நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

இதில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. மேலும் இதில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளதால், இதை உணவில் வெள்ளை சர்க்கரைக்கு பதில் சேர்த்துக்கொள்ளலாம். பழச்சாறுகள், ஸ்மூத்திகளுடன் சேர்த்து எடுக்கலாம். ஒட்டுமொத்தமாக சரிவிகித உணவில் இது முக்கியமாக உள்ளது.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்