கொப்புளங்கள் மற்றும் சிரங்குகள்.. காசாவில் குழந்தைகள் மத்தியில் பரவும் ஆபத்தான தோல் நோய்கள்.. இதுதான் காரணமா?
Skin Diseases : உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததிலிருந்து இடம்பெயர்ந்த காசா மக்கள் நிர்பந்திக்கப்பட்ட மோசமான நிலைமைகளில் பாலஸ்தீனிய பிராந்தியத்தில் 150,000 க்கும் அதிகமான மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததிலிருந்து இடம்பெயர்ந்த காசா மக்கள் மோசமான நிலைமைகளில் பாலஸ்தீனிய பிராந்தியத்தில் 150,000 க்கும் அதிகமான மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனிய பிராந்தியத்தில் 1,50,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்த காசா மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். "என் மகன் இரவு முழுவதும் தூங்க முடியாது, ஏனென்றால் அவனால் தனது உடலை சொறிவதை நிறுத்த முடியாது" என்று கவலையுடன் தாய் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சிறுவனின் கால்களில் வெள்ளை மற்றும் சிவப்பு புள்ளிகள் உள்ளன, மேலும் அவரது டி-ஷர்ட்டுக்கு அடியில் அதிகம் சொறி சிரங்கு முதல் சிக்கன் பாக்ஸ் உள்ளது. சிரங்கு மற்றும் பிற பலவீனப்படுத்தும் தடிப்புகள் வரை தோல் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட பல காசா மக்களில் என் மகனும் ஒருவராவார் என கூறினார்.
சுகாதார பொருட்கள் இல்லை
மேலும் ஒருவர் கூறுகையில், " நாங்கள் படுக்கும் தரையில் எங்களுக்கு அடியில் புழுக்கள் வெளியே வரும். அந்த இடத்தில் தான் நாங்கள் தூங்குகிறோம்" என்று எல்வான் கூறினார். மத்திய காசா நகரமான டெய்ர் அல்-பலாவிற்கு அருகில் கடலுக்கு அருகே ஒரு மணல் திட்டில் வசிக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் எல்வான் குடும்பமும் ஒன்றாகும்.
மேலும் அவர், நோய்த்தொற்றுகள் தவிர்க்க முடியாதவை.முன்பு போல் எங்கள் குழந்தைகளை நாங்கள் குளிப்பாட்ட முடியாது. அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்ய சுகாதார பொருட்கள் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மத்திய தரைக்கடலில் குளிக்க சொல்வார்கள். ஆனால் இந்த யுத்தம் அடிப்படை வசதிகளை சீரழித்ததால் ஏற்பட்டுள்ள மாசுபாடு நோய் அபாயத்தை அதிகரித்துள்ளது.
கடல் முழுவதும் கழிவுநீர், குப்பைகள், குழந்தை நாப்கின்களை கூட கடலில் வீசுகின்றனர். காசாவில் போர் தொடங்கியதில் இருந்து 96,417 பேருக்கு சிரங்கு, 9,274 பேருக்கு சின்னம்மை, 60,130 பேருக்கு தோல் வெடிப்பு மற்றும் 10,038 தோல் நோய்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
கொப்புளங்கள் மற்றும் சிரங்குகள்
டெய்ர் அல்-பலாஹ் முகாமில் ஒரு தற்காலிக கிளினிக்கை நடத்தி வரும் மருந்தாளுநர் சமி ஹமீத் கூறுகையில், கடலோர பாலஸ்தீனிய பிராந்தியத்தில் சிரங்கு மற்றும் சின்னம்மை குறிப்பாக பரவலாக உள்ளன.
கிளினிக்கில் இரண்டு சிறுவர்கள் டஜன் கணக்கான தனித்துவமான சிக்கன் பாக்ஸால் ஏற்பட்ட கொப்புளங்கள் மற்றும் கைகள், கால்கள், முதுகு மற்றும் வயிற்றில் பரவியிருப்பதைக் காட்டினர். மருந்துகள் இல்லாததால் அரிப்பைத் தணிக்க சிறுவர்களின் தோலில் கலமைன் லோஷனைத் தேய்த்தார். குழந்தைகளின் தோல் "வெப்பமான வானிலை மற்றும் சுத்தமான நீர் இல்லாமை" ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
காசாவில் உள்ள மருத்துவ ஒருங்கிணைப்பாளர் முகமது அபு முகைசீப், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், குழந்தைகள் பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏனெனில் அவர்கள் குழந்தைகள் - அவர்கள் வெளியே விளையாடுகிறார்கள், அவர்கள் எதையும் தொடுவார்கள், எதையும் கழுவாமல் சாப்பிடுவார்கள்" என்று கூறினார்.
சரியான சுகாதாரம் இல்லை
மேலும், “வெப்பமான வானிலை வியர்வை மற்றும் சுகாதாரமற்ற நிலையை அதிகரிக்கிறது, இது தடிப்புகள் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது, இது அதிகரித்தால் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்று அபு முகைசீப் கூறினார்.
"மக்கள் வீடுகளில் வசிக்கவில்லை, சரியான சுகாதாரம் இல்லை காசாவின் குழந்தைகள் ஏற்கனவே நோய்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர், ஏனென்றால் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் மோசமானநிலையில் உள்ளன” என்று அவர் கூறினார்.
24 பேருக்கு சொறி சிரங்கு
மருந்தாளுநரான ஹமீது, தனது குழு சமீபத்தில் ஒரு தற்காலிக பள்ளிக்குச் சென்றதாகவும், அங்கு 150 மாணவர்களில் 24 பேருக்கு சொறி சிரங்கு இருந்ததாகவும் கூறினார்.
"அவர்களில் சிலருக்கு தோல் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன, துரதிர்ஷ்டவசமாக இந்த நோய்த்தொற்றுகள் அவர்களிடையே பரவுகின்றன" என்று ஒரு தற்காலிக கூடார பள்ளியின் ஆசிரியர் ஓலா அல்-குலா ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களிலும் பிற நோய்கள் பரவி மோசமான சுகாதாரத்தை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
"இங்குள்ள கழிப்பறைகள் பழமையானவை, கூடாரங்களுக்கு இடையில் உள்ள கால்வாய்களில் வடிகின்றன, இது இறுதியில் தொற்றுநோய்கள் பரவுவதற்கு பங்களிக்கிறது" என்று ஹமீட் கூறினார். 485,000 பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் 37,925 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
காசாவில் சுமார் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுடன் போர் தொடங்கியது, இதன் விளைவாக 1,195 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் பொதுமக்கள் என்று இஸ்ரேலிய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட AFP எண்ணிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் குறைந்தது 37,925 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாபிக்ஸ்