பெண்களைப் படுத்தும் பொடுகுத் தொல்லை; ஒரே மாதத்தில் காணாமல் போகும் – மருத்துவர் கூறுவதை கேளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பெண்களைப் படுத்தும் பொடுகுத் தொல்லை; ஒரே மாதத்தில் காணாமல் போகும் – மருத்துவர் கூறுவதை கேளுங்கள்!

பெண்களைப் படுத்தும் பொடுகுத் தொல்லை; ஒரே மாதத்தில் காணாமல் போகும் – மருத்துவர் கூறுவதை கேளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 06, 2025 04:58 PM IST

பொடுகுத் தொல்லையைப் போக்குவது எப்படி என்று பாருங்கள். மருத்துவர் விளக்குகிறார். சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகளைக் குறிப்பிடுகிறார்.

பெண்களைப் படுத்தும் பொடுகுத் தொல்லை; ஒரே மாதத்தில் காணாமல் போகும் – மருத்துவர் கூறுவதை கேளுங்கள்!
பெண்களைப் படுத்தும் பொடுகுத் தொல்லை; ஒரே மாதத்தில் காணாமல் போகும் – மருத்துவர் கூறுவதை கேளுங்கள்!

பொடுகு, வீட்டில் அனைவருக்கும் வரும். ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுகு தொற்றும் குணம் கொண்டது. எனவே பொடுகை கட்டுப்படுத்த ஒருவர் பயன்படுத்தி துண்டு, சீப்பு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. பொடுகு அதிகம் இருந்தால் அது உங்களுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். முடி உதிர்வை ஏற்படுத்தும். தலையில் அரிப்பு 24 மணி நேரமும் இருக்கும். இதனால் நீங்கள் வெளியில் எங்கு சென்றாலும் தலையை சொரிந்துகொண்டே இருக்கவேண்டிய அசவுகர்யமான சூழல் உருவாகும். இது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் வரும். இதற்காக பிரத்யேக ஷாம்பூக்களை வணிக நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளன. ஆனால் நீங்கள் எளிய முறையிலேயே பொடுகை கட்டுப்படுத்த முடியும். நம் வீட்டில் உள்ள சித்த மருத்துவ மூலிகைகளே அதற்கு போதும் என்று மருத்துவர் காமராஜ் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பொடுகு ஏற்பட காரணங்கள்

தலையில் எண்ணெய் வைக்காவிட்டால்

மனஅழுத்தம் அதிகம் இருந்தால்

வீட்டில் ஒருவருக்கு இருந்தால், அடுத்தவருக்கு பரவும்

மாசுபாடு, வாழ்க்கை முறை

உறக்கமின்மை

மலச்சிக்கல்

சுத்தமில்லாத தண்ணீரில் தலை குளிக்கும்போது

அசுத்தமான டவல், சீப்பு போன்றவற்றை பயன்படுத்தும்போது

தரமற்ற ஷாம்பூ, சோப்புக்களை தலையில் தேய்க்கும்போது

என பொடுகு ஏற்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளது.

தடுக்க வழிகள்

4 எளிய செலவில்லாத வழிமுறைகள் உள்ளது.

சீயக்காயை தேய்த்து தலை குளிக்கவேண்டும்.

பொடுதலை என்ற மூலிகையை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக்கொள்ளவேண்டும். அதை பொடித்து வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துக் குளிக்கவேண்டும். பொடுதலை தைலமாகவே கடைகளில் கிடைக்கும் அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

கருஞ்சீரகத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து, தலையை அலசலாம்.

வேப்ப இலை, குப்பை மேனி, துளசி மூன்றையும் ஒரே அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.

இந்த நான்கையும் நீங்கள் செய்து வந்தால் ஒரே மாத்தில் பொடுகு காணாமல் ஓடிவிடும். இதை நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே எளிய முறையில் செய்துவிடலாம். இதை பின்பற்றி பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடுங்கள் என மருத்துவர் காமராஜ் அறிவுறுத்துகிறார்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.