Dal Makhani : வட இந்தியாவில் பிரபலம்! தால் மக்கானி! கருப்பு உளுந்தில் வீட்டிலே செய்து அசத்தலாம்!
Dal Makhani : வட இந்தியாவில் பிரபலம்! தால் மக்கானி! கருப்பு உளுந்தில் வீட்டிலே செய்து அசத்தலாம்!

தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 4
இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தக்காளி விழுது – 4 பழம் (அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
கொத்தமல்லி தூள்- 2 ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
சர்க்கரை – ஒரு ஸ்பூன்
கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு
ஃப்ரெஷ் கிரீம் – சிறிதளவு
செய்முறை
உளுத்தம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
ஊறவைத்த பருப்பை பிரஷர் குக்கரில் சேர்த்து, பருப்பு முழுவதுமாக மூழ்கும் வரை தண்ணீரை சேர்க்க் வேண்டும்.
குக்கரில், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பிரியாணி இலை சேர்க்கத்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
பருப்பை மிதமான தீயில் 5 முதல் 6 வரும் வரை வேகவிடவேண்டும்.
அகலமான கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, அது நன்றாக சூடானவுடன், சீரகம், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவேண்டும்.
பிறகு தக்காளி விழுது சேர்த்து 10 நிமிடம் வதக்க வேண்டும்.
கிரேவியில் இருந்து எண்ணெய் பிரிந்ததும், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
குக்கரில் இருந்து பிரியாணி இலையை எடுத்து தனியாக வைக்கவேண்டும். சமைத்த பருப்பை குழம்புடன் சேர்த்து கலக்கவேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் மிளகாய் தூள் அல்லது உப்பு சேர்க்கவேண்டும்.
கடாயை ஒரு மூடியால் மூடி, கிரேவியை மிதமான தீயில் 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவேண்டும்.
கடைசியாக கரம் மசாலா தூள், சர்க்கரை, கசூரி மேத்தி தூவி கலந்துவிடவேண்டும்.
பின்னர் வெண்ணெய் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்தால், கருப்பு உளுந்து கறி சூடாக பரிமாற தயாராக உள்ளது.
தால்மக்னி கருப்பு உளுந்தில் செய்யும் கிரேவி, இதை செய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் நீங்கள் இதுபோல் முயற்சித்தால் எளிதாக முடிந்துவிடும். இது வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படுகிறது.
இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கும், இதை நீங்கள் இஞ்சிப்பொடி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்தும் செய்யலாம்.
இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவில், முழு கருப்பு உளுந்து பயன்படுத்தப்படுகிறது. கருப்பு உளுந்து தாவர புரதம் நிறைந்த ஒரு உணவு. இதை சாப்பாத்தி, பூரி, நான், ரொட்டி, ஃபுல்கா என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து பயன்படுத்தலாம். சாத்துடனும் பயன்படுத்தலாம். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்து இந்த உணவை எளிதாக செய்யலாம்.
தால் மக்னியை துவரம் பருப்பு அல்லது அனைத்து பருப்புகளும் கலந்து என பல்வேறு முறைகளிலும் செய்யலாம். கருப்பு உளுந்தில் செய்யும்போது அதில் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கிறது. கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுக்ஙள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்