தஹி பிண்டி கறி; வட இந்தியாவின் ரெசிபி, எளிதாக செய்யலாம்! சாப்பாத்தி, பாஸ்மதி ரைஸ்க்கு ஏற்றது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தஹி பிண்டி கறி; வட இந்தியாவின் ரெசிபி, எளிதாக செய்யலாம்! சாப்பாத்தி, பாஸ்மதி ரைஸ்க்கு ஏற்றது!

தஹி பிண்டி கறி; வட இந்தியாவின் ரெசிபி, எளிதாக செய்யலாம்! சாப்பாத்தி, பாஸ்மதி ரைஸ்க்கு ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Jan 06, 2025 03:57 PM IST

வட இந்தியாவில் பிரபலமான தஹி பிண்டி செய்வது எப்படி என்று பாருங்கள்.

தஹி பிண்டி கறி; வட இந்தியாவின் ரெசிபி, எளிதாக செய்யலாம்! சாப்பாத்தி, பாஸ்மதி ரைஸ்க்கு ஏற்றது!
தஹி பிண்டி கறி; வட இந்தியாவின் ரெசிபி, எளிதாக செய்யலாம்! சாப்பாத்தி, பாஸ்மதி ரைஸ்க்கு ஏற்றது!

(கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் – 2 ஸ்பூன்

பிரியாணி இலை – 1

தயிர் – ஒரு கப்

சீரகம் – அரை ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொடியாகவும் நறுக்கிக்கொள்ளலாம்)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

சீரகத் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை -சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முதலில் வெண்டைக்காயை மட்டும் வதக்கிக்கொள்ளவேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு, மீதி எண்ணெயையும் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, சீரகம், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.

அடுத்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். இஞ்சி-பூண்டு விழுது, சீரகத் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து தயிரை அடித்து சேர்த்து கலக்கவேண்டும்.

கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு, வதக்கிய வெண்டைக்காய்களை சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து கொதிக்கவிடவேண்டும். கைப்பிடியளவு மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான தஹி பிண்டி கறி தயார்.

இதை சப்பாத்தி, ரொட்டி, ஃபுல்கா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். பிரியாணி, ஃப்ரைட் ரைஸ்களுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

சூப்பர் சுவையான அந்த தஹி பிண்டி கறியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

வெண்டைக்காயில் உள்ள நன்மைகள்

வெண்டைக்காயில் கொழுப்பு அறவே கிடையாது. இதில் பெக்டின் என்ற உட்பொருள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மைகொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் சர்க்கரையை மெதுவாக ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இதனால் செரிமானம் மெதுவாக நடக்கிறது. மற்ற காய்கறிகளைவிட வெண்டைக்காயில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல் செல்களில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான செரிமான மண்டலத்தைக் கொடுக்கின்றன. இது குடல் புற்றுநோயைத் தடுக்கிறது. வெண்டைக்காயில், அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, பொதுவான தொற்றுக்களை தடுக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில், தினமும் உட்கொள்ளவேண்டிய வைட்டமின் சி சத்தில் 40 சதவீதம் உள்ளது.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.