Benefits of Cycling : சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு நல்லது; இந்த 8 காரணங்களுக்காக நீங்கள் இதை செய்யலாம்! அவை என்ன?
சைக்கிள் ஓட்டுவதால் உங்கள் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?

சைக்கிள் ஓட்டுவது உங்கள் உடல் நலனுக்கு மிகவும் நல்லது. எனவே நீங்கள் இந்த 8 காரணங்களுக்காக சைக்கிள் ஓட்டி பழகலாம். அது என்னவென்று பாருங்கள். தினமும் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் நீங்கள் கட்டாயம் சைக்கிள் ஓட்டுவீர்கள். ஏனெனில் சைக்கிள் ஓட்டுவது ஒரு ஃபன் நடவடிக்கை மட்டும் கிடையாது அல்லது போக்குவரத்துக்கு உதவக்கூடியது மட்டும் கிடையாது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கங்களுள் ஒன்றாகும். நீங்கள் உங்களுக்கு பிடித்த இயற்கை எழில் நிறைந்த பகுதிகளின் வழியாக சைக்கிள் ஓட்டுகிறீர்கள் அல்லது நிற்கும் பைக்கில் பெடல் மட்டும் செய்கிறீர்கள். உங்களுக்கு குறைந்த பாதிப்பைக் கொடுக்கும் இந்த பயிற்சி உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. நீங்கள் ஏன் தினமும் சைக்கிள் ஓட்டிப்பழகவேண்டும் என்று பாருங்கள்.
தசைகளின் வலுவை அதிகரிக்கிறது
நீங்கள் சைக்கிள் ஓட்டும்போது பல்வேறு தசை தொகுப்புக்களும் அதில் ஈடுபடுகிறது. கால், தொடைப்பகுதி மற்றும் இடுப்பில் உள்ள தசைப் பகுதிகளுக்கு ஒரு சிறிய பயிற்சி கிடைக்கிறது. இது உங்கள் தசைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது நீங்கள் நிற்கும் நிலை, உங்கள் உடலின் சமம் மற்றும் ஒட்டுமொத்த நெகிழ் தன்மையையும் அதிகரிக்கிறது.
நுரையீரலின் ஆற்றலை அதிகரிக்கிறது
நீங்கள் சைக்கிள் ஓட்டும்போது நீங்கள் மூச்சுவிடுவதில் ஒரு சமநிலை ஏற்படும். அது உங்கள் நுரையீரலுக்கு வலு சேர்க்கிறது. அது உங்களின் திறனை அதிகரிக்கிறது. இந்த அதிகமான நுரையீரல் திறன், உங்களுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதை மேம்படுத்துகிறது. உங்கள் உடல் முழுமைக்கும் சீரான முறையில் கிடைக்க வழி செய்கிறது. இது உங்கள் உடலின் தாங்கும் திறனை அதிகரிக்கிறது.