Curry Leaves Thokku : ஒரு மாதம் கெடாது! இந்த ஒரு தொக்க செஞ்சு வெச்சுட்டு நிம்மதியா இருங்க!
Curry Leaves Thokku : கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 25 பல்
வர மிளகாய் – 10
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி (நன்றாக அலசியது)
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
தட்டிய பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – ஒரு ஸ்பூன் (பொடித்தது)
செய்முறை
ஒரு கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், உரிந்த பூண்டு பல் 25 சேர்த்து நன்றாக வதக்க வேணடும்.
பின்னர் வர மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கழுவி சுத்தம் செய்த கறிவேப்பிலை ஒரு கைப்பிடியளவு சேர்க்க வேண்டும்.
அனைத்தையும் சேர்த்து வதக்கி நன்றாக ஆறவிடவேண்டும். ஆறிய பின்னர் ஒரு மிக்ஸிஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, தட்டிய பூண்டு பல் சேர்த்து வதக்கி, அரைத்தவற்றை அதில் கலந்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
அதில் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்திருக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை அனைத்துவிடவேண்டும். கறிவேப்பிலை தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்துக்கும் ஏற்றது.
ஆறியவுடன் இந்த தொக்கை எடுத்து ஒரு காற்றுப்புகாத கண்ணாடி ஜாடியில் வைத்துவிடவேண்டும். இதை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
தேவைப்படும்போது எடுத்து சூடு செய்து உபயோகிக்க வேண்டும். குறிப்பாக இதை வேலைக்கு செல்பவர்கள் தயாரித்து வைத்துக்கொண்டால் அவசரத்துக்கு உதவும் ஒன்றாகும்.
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள்
கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரிகள் உள்ளது. இதில் பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் உள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதன் சுவையும், மணமும் வித்யாசம் நிறைந்ததாக இருக்கும். இது வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
கொழுப்பை குறைக்க உதவுகிறது
செரிமானத்துக்கு உதவுகிறது
கல்லீரலுக்கு சிறந்தது
தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது
பாக்டீரியாவை போக்குகிறது
எடையை குறைக்க உதவுகிறது
பக்கவிளைவுகளை தடுக்கிறது
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
நீரிழிவை குணப்படுத்துகிறது
காயங்களை குணப்படுத்த உதவுகிறது
பொதுவாக கறிவேப்பிலையை நாம் தினமும் உணவில் தாளிக்க பயன்படுத்துகிறோம். ஆனால் அதை பெரும்பாலும் சாப்பிடுவதில்லை, தூக்கி எறிந்துவிடுகிறோம். அதனால் அதன் நன்மைகள் நமக்கு முழுமையாக கிடைக்காமல் போகும். எனவே இதுபோல் அரைத்து தொக்காக பயன்படுத்தும்போது அதன் முழு நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
