Curry Leaves Kuzhambu Premix : இந்த ஒரு பொடி மட்டும் செஞ்சு வெச்சுக்கோங்க! நெனச்சவுடனே செய்யலாம் கறிவேப்பிலை குழம்பு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves Kuzhambu Premix : இந்த ஒரு பொடி மட்டும் செஞ்சு வெச்சுக்கோங்க! நெனச்சவுடனே செய்யலாம் கறிவேப்பிலை குழம்பு!

Curry Leaves Kuzhambu Premix : இந்த ஒரு பொடி மட்டும் செஞ்சு வெச்சுக்கோங்க! நெனச்சவுடனே செய்யலாம் கறிவேப்பிலை குழம்பு!

Priyadarshini R HT Tamil
Jun 07, 2024 01:18 PM IST

Curry Leaves Kuzhambu Premix : இந்த ஒரு பொடி மட்டும் செஞ்சு வெச்சுக்கோங்க. நெனச்சவுடனே செய்யலாம் கறிவேப்பிலை குழம்பு. ருசியும் அசத்தும், ஆரோக்கியமும் நிறைந்தது.

Curry Leaves Kuzhambu Premix : இந்த ஒரு பொடி மட்டும் செஞ்சு வெச்சுக்கோங்க! நெனச்சவுடனே செய்யலாம் கறிவேப்பிலை குழம்பு!
Curry Leaves Kuzhambu Premix : இந்த ஒரு பொடி மட்டும் செஞ்சு வெச்சுக்கோங்க! நெனச்சவுடனே செய்யலாம் கறிவேப்பிலை குழம்பு!

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – ஒரு கப்

கடலை பருப்பு – கால் கள்

உளுந்து – 2 ஸ்பூன் (தோலுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்)

சீரகம் – ஒரு ஸ்பூன்

வரமல்லி – கால் கப்

வரமிளகாய் – 5 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவேண்டும்)

வெந்தயம் – கால் ஸ்பூன்

புளி – ஒரு எலுமிச்சை அளவு

உப்பு – ஒரு ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

குண்டு மிளகாய் – 5

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி அதில் கறிவேப்பிலை, கடலை பருப்பு, உளுந்து, சீரகம், வர மல்லி, மிளகாய், வெந்தயம், புளி என அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதை ஒரு தட்டில் சேர்த்து நன்றாக ஆறவைத்து, பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு தாளித்து, குண்டு மிளகாய் சேர்த்து பொரிவிட்டு, அதை அரைத்த பொடியில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சூப்பர் சுவையில் கறிவேப்பிலை குழம்புப் பொடி தயார்.

கறிவேப்பிலை பொடியை வைத்து குழம்பு தயாரிப்பது எப்படி?

உங்களுக்கு தேவைப்படும்போது, இந்தப்பொடியை மூன்று ஸ்பூன் இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் எண்ணெய் அல்லது நெய் விட்டு சாப்பிட சுவைஅள்ளும்.

இதை தயார் செய்து வைத்துக்கொண்டால் அவசரத்திற்கு நாம் சாதம் மட்டும் செய்துவிட்டு, கறிவேப்பிலை குழம்பை வைத்துக்கொள்ளலாம். இதற்கு தொட்டுக்கொள்ள வத்தல் அல்லது அப்பளம் போதுமானது என்பதால், இது சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ஒன்றாக உள்ளது.

கறிவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரிகள் உள்ளது. இதில் பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் உள்ளது.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதன் சுவையும், மணமும் வித்யாசம் நிறைந்ததாக இருக்கும். இது வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

கொழுப்பை குறைக்க உதவுகிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது.

கல்லீரலுக்கு சிறந்தது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

பாக்டீரியாவை போக்குகிறது.

எடையை குறைக்க உதவுகிறது.

பக்கவிளைவுகளை தடுக்கிறது.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவை குணப்படுத்துகிறது.

காயங்களை குணப்படுத்த உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.