Tamil News  /  Lifestyle  /  Curd Sandwich: Can You Make A Break Fast Without An Oven? How?

Curd Sandwich : அடுப்பே இல்லாமல் ஒரு ப்ரேக் ஃபாஸ்ட் பண்ண முடியுமா? எப்படி?

Priyadarshini R HT Tamil
Nov 19, 2023 12:00 PM IST

Curd Sandwich : அடுப்பே இல்லாமல் ஒரு ப்ரேக் ஃபாஸ்ட் பண்ண முடியுமா? எப்படி? இதோ ரெசிபி செய்து பாருங்கள்.

Curd Sandwich : அடுப்பே இல்லாமல் ஒரு ப்ரேக் ஃபாஸ்ட் பண்ண முடியுமா? எப்படி?
Curd Sandwich : அடுப்பே இல்லாமல் ஒரு ப்ரேக் ஃபாஸ்ட் பண்ண முடியுமா? எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

முட்டைக்கோஸ் - அரை கப் (மெல்லிசாக நறுக்கியது)

கேரட் – 1 (துருவியது)

உலர் தயிர் – அரை கப்

தக்காளி சாஸ் – சிறிதளவு

வெள்ளரிக்காய் – அரை (வட்டமாக நறுக்கியது)

தக்காளி – 1 (வட்டமாக நறுக்கியது)

மிளகுத்தூள் – 1 சிட்டிகை

சாட் மசாலா – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை –

ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் உலர் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

(உங்கள் வீட்டில் சாதாரண தயிர்தான் இருக்கிறது என்றால் கவலையே வேண்டாம். அந்த தயிரை ஒரு துணியில் கொட்டி, வடிகட்டியில் அடியில் பாத்திரம் வைத்து அரை மணி நேரம் வைத்தால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீர் அந்தப்பாத்திரத்தில் சேகரிக்கப்படும். கடையில் வாங்கும் தயிர் கெட்டியாக இருக்கும். அதைப்பயன்படுத்தலாம். இந்த சாண்விச்சை நீங்கள் ப்ரேக் ஃபாஸ்டுக்கு பயன்படுத்துகிறீர்கள் என்றால் ப்ரோ பயோடிக் தயிர் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த தயிர் குடலுக்கு தேவையான நல்ல பேக்டீரியாக்களை வயிற்றில் உருவாக்கும். எந்த தயிரும் எடுத்துக்கொள்வது உங்கள் சாய்ஸ்தான்.)

அந்தத் கெட்டியான தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அனைத்து துருவிய மற்றும் நறுக்கப்பட்ட காய்களை சேர்த்து, நன்கு கலந்து தனியே வைக்கவேண்டும்.

நீங்கள் வெள்ளரி தக்காளியை வட்டமாக வெட்டியிருந்தீர்கள் என்றால் அதை நேரடியாக சேர்க்க வேண்டும். கேரட்டை மட்டும் துருவிய தயிரில் சேர்த்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டியிருந்தால் தயிரில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளலாம்.

பிரட் கட்டர் மூலம் ஹார்டின் வடிவில் அனைத்து ரொட்டி துண்டுகளையும் வெட்டவும் (உங்கள் விருப்பப்படி எந்த வடிவத்தையும் வெட்டலாம் அல்லது அப்படியே கூட எடுத்துக்கொள்ளலாம். ஓரங்களை வேண்டுமானாலும் நீக்கலாம் அல்லது வைத்துக்கொள்ளலாம். அது உங்கள் விரும்பபம் தான்.)

சதுரமாகவோ முக்கோணமாகவோ நறுக்கி எல்லா ஸ்லைசிலும் தக்காளி சாஸை நன்றாக தடவவேண்டும்.

பின்னர் அதில், ஒரு ஸ்லைசில் தயிர் மற்றும் காய்கறி கலவையைத் தடவி மற்றொரு ஸ்லைசால் மூடி வைக்கவேண்டும். ருசியான தயிர் பிரட் சாண்ட்விச் ரெடி.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இதை ப்ரேக் ஃபாஸ்ட் மற்றும் ஸ்னாக் டைம் என எதற்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதில் 2 ஸ்பூன் நன்கு ஊற வைத்த நிலக் கடலை (அ) பாதாம் துருவிப் போட்டு சேர்த்துக்கொள்ளலாம். இது முற்றிலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் செய்யலாம். இல்லாவிட்டாலும் இந்த சாண்ட் விச் சுவையாக இருக்கும்.

தயிரே சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த தயிர் சாண்விச்சை விரும்பி சாப்பிடுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்