தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Cumin Seeds : This One Item In A Box Of Five Is Enough! From Kidney Disorders To Nervous Diseases!

Cumin Seeds : ஐந்தரைப்பெட்டியில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்! சிறுநீரக கோளாறு முதல் நரம்பு நோய்கள் வரை சீராக்கும்!

Priyadarshini R HT Tamil
Feb 24, 2024 11:46 AM IST

Cumin Seeds : This one item in a box of five is enough! From kidney disorders to nervous diseases!

Cumin Seeds : ஐந்தரைப்பெட்டியில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்! சிறுநீரக கோளாறு முதல் நரம்பு நோய்களை வரை சீராக்கும்!
Cumin Seeds : ஐந்தரைப்பெட்டியில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்! சிறுநீரக கோளாறு முதல் நரம்பு நோய்களை வரை சீராக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

சீரகம் இல்லாத ஐந்தரைப்பெட்டிகளே நம்ம ஊர் சமையலறைகளில் இருக்க முடியாது. ஏனெனில் ரசம் என்பது நம் தமிழர்களின் அன்றாட உணவுப்பட்டியலில் பரிமாறப்படும் ஒரு உணவாகும். மிளகு, சீரகம், பூண்டு, மிளகாய், புளி, தக்காளி சேர்த்து செய்யப்படும் ரசம் நமக்கு உணவு உண்டபின் ஜீரணத்துக்கு உதவுகிறது. அதனால்தான் அதை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். அத்தகைய இந்த சீரகத்தின் சிறப்புகள் குறித்து நாம் இங்கு காணலாம்.

ரத்த அழுத்தம் இருப்பவர்கள், சிறுநீரகத்தில் கோளாறு உள்ளவர்கள், சீரக நீரை எப்போதும் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்ததை சீராக வைத்துக்கொள்ள உதவும். சிறுநீரை கழிக்கும்போது சிறுநீரத்தில் உள்ள கழிவுகள் மற்றும் தொற்றுகளை போக்க உதவும்.

சீரகம் மற்றும் ஏலம் இரண்டையும் இளவறுப்பாக வறுத்து பொடி செய்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை உணவிற்குப்பின் கால் ஸ்பூன் அளவு சாப்பிட அஜீரண கோளாறுகள் தீர்வதுடன் வாய் மணக்கும்.

சாதாரண சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் குணமாகும்.

சீரகம் சருமம் பொலிவு பெறவும் உதவும் ஒரு உணவாகும். சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. அது இளமையை தக்கவைக்க உதவும். சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். தலைமுடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.

மலச்சிக்கலை போக்க, சீரகத்தில் உள்ள நார்சத்துக்கள் உதவும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும். பொதுவாகவே வீட்டில் சீரகத்தின் அடிக்கடி பருகுவது உடலுக்கு நல்லது.

சீரக கஷாயம்

சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது. இதில் வெண்ணெய் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்படும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் அதை உலை கொதிநீரில் போட்டு பனங்கற்கண்டு, வெண்ணெய் சேர்த்து பருகினால், கர்ப்ப கால மலச்சிக்கலை அது போக்க உதவும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச்சாப்பிட்டால், நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அடிக்கடி வயிறு உபாதைகள் ஏற்பட்டால், வீட்டில் சாதாரண தண்ணீருக்குப் பதில் சாப்பிடும்போது மிதமான சூட்டில் சீரக தண்ணீரை பருகினால், அது வயிறு கோளாறுகளை குணமாக்கும். இதுவே சீரகத்தின் பலன்கள் ஆகும். இவ்வளவு சிறப்புகள் உள்ள சீரகத்தை உணவில் சேர்த்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்