தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cucumber Water: உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முதல் எடை குறைப்பு வரை..!கோடை காலத்தில் மாயாஜாலம் நிகழ்த்தும் வெள்ளரி நீர்

Cucumber Water: உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முதல் எடை குறைப்பு வரை..!கோடை காலத்தில் மாயாஜாலம் நிகழ்த்தும் வெள்ளரி நீர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 15, 2024 06:01 PM IST

உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முதல் எடை குறைப்புக்கு வழிவகுப்பது, சரும ஆரோக்கியத்தை பேனி பாதுகாப்பது என கோடை காலத்துக்கு உகந்த பானமாக வெள்ளரி நீர் இருந்து வருகிறது.

கோடை காலத்தில் மாயாஜாலம் நிகழ்த்தும் வெள்ளரி நீர்
கோடை காலத்தில் மாயாஜாலம் நிகழ்த்தும் வெள்ளரி நீர்

ட்ரெண்டிங் செய்திகள்

உங்கள் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குவதோடு, சரும ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கும். வெள்ளரி பானத்தால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை தயார் செய்யும் முறைகள் பற்றி பார்க்கலாம்

வெள்ளரி நீர் என்றால் என்ன?

வெள்ளரி நீர் என்பது வெள்ளரியை மூலப்பொருளாக கொண்ட பானமாகும். “உடலுக்கு குளிர்ச்சி தரும் கோடைகால பானமாக இருந்து வரும் வெள்ளிரியில், 96 சதவிகிதம் நீர் சத்து உள்ளது. இவை உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இந்த பானத்தில் கலோரிகள் மிகக் குறைவு, ஒரு கப் வெட்டப்பட்ட வெள்ளரி சுமார் 16 கலோரிகளைக் கொண்டுள்ளது, எனவே உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றதாக அமைகிறது.

வெள்ளரியில் இருக்கும் ஊட்டச்சத்து உள்ளடக்கம்

அமெரிக்க வேளாண்மை துறையின் கூற்றுப்படி, 100 கிராம் பச்சையாக நறுக்கிய வெள்ளரிக்காயில் பின்வரும் ஊட்டச்சத்துக்களின் அளவுகள் இருக்கின்றன

தண்ணீர்: 137 கிராம்

கலோரிகள்: 17

புரதம்: 0.8 கிராம்

கொழுப்பு: 0.2 கிராம்

கார்போஹைட்ரேட்: 2.0 கிராம் சர்க்கரை உட்பட 3.1 கிராம்

ஃபைபர்: 1.0 கிராம்

கால்சியம்: 19.9 கிராம்

இரும்பு: 0.3 மி.கி

மக்னீசியம்: 17 மி.கி

பாஸ்பரஸ்: 29.8 மி.கி

பொட்டாசியம்: 193 மி.கி

சோடியம்: 2.8 மி.கி

வைட்டமின் சி: 4.5 மி.கி

வெள்ளரி தண்ணீர் செய்வது எப்படி?

வெள்ளரிக்காய் தண்ணீருக்கென தனியான செய்முறை எதுவும் இல்லை, நாம் பருகும் குடிநீரில் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட வெள்ளரி சேர்த்து பிளெண்ட் செய்ய வேண்டும்.

வெள்ளரி நீர் தயார் செய்ய தேவையான பொருட்கள்

தண்ணீர் - 8 கப்

வெள்ளரிகள் - 2 (மெல்லியதாக வெட்டப்பட்டது)

செய்முறை

வெட்டப்பட்ட வெள்ளரிகளை ஒரு பெரிய குடம் அல்லது ஜாடியில் சேர்த்து, பின்னர் அதில்

தண்ணீரை ஊற்றி நன்கு கிளறவும்.

இந்த கலவையை குறைந்தது 4 மணிநேரம் அல்லது ஒரே இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

தண்ணீரை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர் இந்த பானத்தை அப்படியே எடுத்து பருகலாம். மூன்று நாள்களுக்குள் இந்த பானத்தை குடித்து முடித்து விட வேண்டும்.

நன்மைகள்

வெள்ளரி நீர் குடிப்பதால் உடலில் நீர்இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். இதனால் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தி சீரான செரிமானத்துக்கு உதவும்

குறைந்த கலோரி உள்ளடக்கம் மற்றும் நீரேற்றம் பண்புகள் காரணமாக, வெள்ளரி தண்ணீர் எடை மேலாண்மைக்கு ஒரு பயனுள்ள பானமாக இருக்கும்.

சிறிய அளவில், வெள்ளரி நீர் சில எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களை வழங்குகிறது. இந்த தாதுக்கள் சரியான தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது.

ஆரோக்கியமான சருமத்தை பெற நீரேற்றமாக இருப்பது அவசியம். போதுமான திரவங்களை உட்கொள்வது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதோடு சுருக்கங்களின் தோற்றத்தையும் குறைக்கும்.

கூடுதலாக, வெள்ளரிக்காயின் வைட்டமின் சி உள்ளடக்கம் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்துக்கும் பங்களிக்கும் என நம்பப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்