வெள்ளரி ஊறுகாய் : சட்டுன்னு செஞ்சிடலாம் இந்த வெள்ளரி ஊறுகாயை; நீண்ட நாள் வெச்சு சாப்பிடலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெள்ளரி ஊறுகாய் : சட்டுன்னு செஞ்சிடலாம் இந்த வெள்ளரி ஊறுகாயை; நீண்ட நாள் வெச்சு சாப்பிடலாம்!

வெள்ளரி ஊறுகாய் : சட்டுன்னு செஞ்சிடலாம் இந்த வெள்ளரி ஊறுகாயை; நீண்ட நாள் வெச்சு சாப்பிடலாம்!

Priyadarshini R HT Tamil
Updated Apr 13, 2025 09:07 AM IST

வெள்ளரி ஊறுகாய் : வெள்ளரியில் ஊறுகாய் செய்ய முடியும். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

வெள்ளரி ஊறுகாய் : சட்டுன்னு செஞ்சிடலாம் இந்த வெள்ளரி ஊறுகாயை; நீண்ட நாள் வெச்சு சாப்பிடலாம்!
வெள்ளரி ஊறுகாய் : சட்டுன்னு செஞ்சிடலாம் இந்த வெள்ளரி ஊறுகாயை; நீண்ட நாள் வெச்சு சாப்பிடலாம்!

தேவையான பொருட்கள்

• வெள்ளரி – 4

• வினிகர் – ஒரு கப்

• தண்ணீர் – ஒரு கப்

• கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்

• சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

• பூண்டு – 4 பல் (நைத்தது)

• கடுகு – கால் ஸ்பூன்

• சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு ஸ்பூன் (இது தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்)

செய்முறை

1. வெள்ளரியை சுத்தம் செய்து நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

2. வினிகர், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து உப்பு கரையும் வரை அதை சூடாக்கவேண்டும்.

3. அதில் நறுக்கிய வெள்ளரிக்காயை ஊறவைக்கவேண்டும். ஒரு பாட்டிலில் இந்தக் கலவையை சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் பூண்டும் சேர்த்து ஊறவிடவேண்டும். மேலும் கடுகு, சர்க்கரை மற்றும் சில்லி ஃப்ளேக்ஸையும் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

4. இந்தக் கலவையை 24 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும். இதை ஊறவைத்து சாப்பிடவேண்டும். ஊற ஊற இதன் சுவை அதிகரிக்கும்.

இதை தயிர் சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும். இந்த தயிர் சாதத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சாதத்தை முதலில் வடித்துக்கொள்ளவேண்டும். அதில் ஒரு கப் பால் மற்றும் கால் கப் தயிர் சேர்த்து நன்றாக அடித்து மசிக்கவேண்டும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். அது பொரிந்தவுடன் பச்சை மிளகாய் மற்றும் தட்டிய கால் இன்ச் இஞ்சி சேர்த்து வதக்கி இந்த தயிர் சாதத்தில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்த்தால் சுவையான தயிர் சாதம் தயார். இதற்கு வெள்ளரி ஊறுகாயை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இந்த வெயிலுக்கு இதைவிட இதமான ரெசிபி ஒன்று இருக்க முடியாது.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.