வெள்ளரி பச்சடி : வெயிலுக்கு இதமான வெள்ளரி பச்சடி; ஓணம் ஸ்பெஷல் ரெசியை எப்படி செய்வது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெள்ளரி பச்சடி : வெயிலுக்கு இதமான வெள்ளரி பச்சடி; ஓணம் ஸ்பெஷல் ரெசியை எப்படி செய்வது பாருங்கள்!

வெள்ளரி பச்சடி : வெயிலுக்கு இதமான வெள்ளரி பச்சடி; ஓணம் ஸ்பெஷல் ரெசியை எப்படி செய்வது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 24, 2025 02:50 PM IST

வெள்ளரி பச்சடி : வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் பச்சடியை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். இதை கேரள மக்கள் ஓணம் பண்டிகைக்கு செய்து பரிமாறுகிறார்கள்.

வெள்ளரி பச்சடி : வெயிலுக்கு இதமான வெள்ளரி பச்சடி; ஓணம் ஸ்பெஷல் ரெசியை எப்படி செய்வது பாருங்கள்!
வெள்ளரி பச்சடி : வெயிலுக்கு இதமான வெள்ளரி பச்சடி; ஓணம் ஸ்பெஷல் ரெசியை எப்படி செய்வது பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• வெள்ளரி – 2

• தயிர் – ஒரு கப்

• தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• இஞ்சி – கால் இன்ச்

• பெரிய வெங்காயம் – ஒரு கப்

• உப்பு – தேவையான அளவு

• கடுகு – கால் ஸ்பூன்

• வர மிளகாய் – 1

• சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் இஞ்சியை சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவேண்டும்.

2. அடுத்து பச்சை மிளகாய் மற்றும் வெள்ளரி விதைகளை சேர்த்து வதக்கவேண்டும். அதை எடுத்து ஆறவைத்து, தயிரை அடித்து சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். கடுகு வெடித்தவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவேணண்டும். அடுத்து வர மிளகாயை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த தாளிப்பை பிரட்டி வைத்துள்ள வெள்ளரி தயிர் கலவையில் சேர்க்கவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும்.

பரிமாறும்போது எடுத்து பரிமாறிக்கொள்ளுங்கள். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்புகள்

கடைசியில்தான் உப்பு சேர்த்கவேண்டும். முதலிலே உப்பு சேர்த்துவிட்டால், அது தண்ணீரை வெளியேற்றி பச்சடியை நீர்த்துப்போகச்செய்யும். எனவே உப்பை கடைசியில் தான் சேர்க்கவேண்டும். இதனால் வெள்ளரி பச்சடி சூப்பர் சுவையானதாகவும், கெட்டியாகவும் இருக்கும்.

இதை பிரியாணி, மீல்ஸ், வெரைட்டி சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.