கிரீமி ஒயிட் சாஸ் பாஸ்தா : கிரீமியான ஒயிட் சாஸ் பாஸ்தா! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்! சூப்பர் சுவையான ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கிரீமி ஒயிட் சாஸ் பாஸ்தா : கிரீமியான ஒயிட் சாஸ் பாஸ்தா! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்! சூப்பர் சுவையான ரெசிபி இதோ!

கிரீமி ஒயிட் சாஸ் பாஸ்தா : கிரீமியான ஒயிட் சாஸ் பாஸ்தா! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்! சூப்பர் சுவையான ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Updated Mar 10, 2025 05:27 PM IST

கிரீமி ஒயிட் சாஸ் பாஸ்தா : கிரீமியான ஒயிட் சாஸ் பாஸ்தாவை, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். செய்வது எளிதுதான். எனவே செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

கிரீமி ஒயிட் சாஸ் பாஸ்தா : கிரீமியான ஒயிட் சாஸ் பாஸ்தா! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்! சூப்பர் சுவையான ரெசிபி இதோ!
கிரீமி ஒயிட் சாஸ் பாஸ்தா : கிரீமியான ஒயிட் சாஸ் பாஸ்தா! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்! சூப்பர் சுவையான ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்

அரைக்க தேவையான பொருட்கள்

• காலிஃப்ளவர் – 5 இதழ்கள்

• முந்திரி – ஒரு கைப்பிடியளவு (ஊறவைத்தது)

• சீஸ் – ஒரு க்யூப்

• பால் – கால் டம்ளர்

தாளிக்க தேவையான பொருட்கள்

• வெண்ணெய் – 50 கிராம்

• பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• ஸ்வீட் கார்ன் – ஒரு கப் (உதிர்த்தது)

• மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்

• சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு ஸ்பூன்

• ஓரிகானோ – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• பாஸ்தா – ஒரு கப் (சூடான தண்ணீரில் சேர்த்து வேகவைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்)

செய்முறை

1. சூடான தண்ணீரில் காலிஃப்ளவரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வடித்து, ஆறவைக்கவேண்டும். அதனுடன் ஊறவைத்த முந்திரி பருப்பு, சீஸ் மற்றும் பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அது உருகியவுடன், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்கவேண்டும். அவை பொன்னிறமானவுடன். பெரிய வெங்காயம் மற்றும் ஸ்வீட் கார்னையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

3. அடுத்து அரைத்தவற்றை சேர்த்து, ஓரிகானோ, மிளகுத் தூள், சில்லி ஃப்ளேக்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். அடுத்து வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்றாக கலந்து விட்டு இறக்கினால் சூப்பர் சுவையான ஒயிட் சாஸ் கிரீமீ பாஸ்தா தயார்.

இதை உங்கள் வீட்டில் குழந்தைகளிடம் கொடுத்துப் பாருங்கள். இன்னும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். பெரியவர்களும் குழந்தைகளுடன் போட்டிப்போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவையான இந்த பாஸ்தாவை நீங்கள் ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.