ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: சுவைக்கலாம், ருசிக்கலாம்.. குழந்தைகளுக்கு பிடித்தமான க்ரீமி ரவை அல்வா - கடவுளுக்கான பிரசாதம்
Creamy Rava Halwa: குழந்தைகளுக்கு பிடித்தமான ஆரோக்கிய ஸ்நாக்ஸ் ஆகவும், ஸ்ரீ ராம நவமி போன்ற பண்டிகை விழாக்காலங்களில் கடவுள்களுக்கு வழங்கப்படும் பிரசாதமாகவும் ரவை அல்வா இருந்து வருகிறது. சுவை மிகுந்த க்ரீமியான ரவை அல்வா செய்யும் முறையை தெரிந்து கொள்ளலாம்.

இனிப்பு, காரம் போன்ற சுவைகளில் பல்வேறு உணவுகளை தயார் செய்யும் உணவு பொருள்களில் ரவை முக்கியமானதாக இருந்து வருகிறது. ரவை உப்புமா தொடங்கி ரவை தோசை, ரவை வடை, ரவை கேசரி என ரவை வைத்து தயார் செய்யும் அன்றாட உணவுகள் ஏராளமாக உள்ளன. இதுதவிர ரவையை வைத்தும், ரவையை பிற உணவு பொருள்களோடு சேர்ததும் சில புது மாதிரியான பலகாரங்கள், உணவுகளை தயார் செய்யலாம். அந்த வகையில் ரவையை வைத்து க்ரீமியான ரவை அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஸ்ரீ ராம நவமி நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த நாளில், அனைத்து ராமர் கோயில்களிலும் ராமர் - சீதாவுக்கு கல்யாணமஹோட்சம் செய்யப்படுகிறது. மேலும், வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடவுளுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இனிப்புகளை மிகவும் விரும்பும் கடவுளாக இருப்பவர் ராமர் என நம்பப்படுகிறது.
அந்த வகையில் ராம நவமி நாளில் வழங்கப்படும் பிரசாதங்களில் அல்வாவுக்கு சிறப்பு முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே ராம் நவமி நாளில் தயார் செய்யப்பட்டு பரிமாறப்படும் பிரசாதங்களில் ஒன்றாகவும் ரவை அல்வா இருந்து வருகிறது. ரவை மற்றும் கோவாவுடன் சுவை மிகுந்த இந்த அல்வாவை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்
ரவையுடன் கிரீமி அல்வா செய்ய தேவையான பொருள்கள்
ரவை - ஒரு கப்
பால் - மூன்று கப்
நெய் - ஒரு கப்
முந்திரி பருப்பு - இரண்டு கரண்டி
பாதாம் பருப்பு - இரண்டு கரண்டி
திராட்சை - இரண்டு கரண்டி
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் - 4 முதல் 5 வரை
கோவா - 200 கிராம்
கிரீமி ஹல்வா செய்வது எப்படி?
- முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.பின்னர் ரவையில் பால் சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். இதனால் ரவை வீங்கி மென்மையாகிறது
- இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து குறைந்த தீயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- நெய் சிறிது சூடானதும், முந்திரி, பாதாம் மற்றும் பிற உலர் பழங்களைச் சேர்க்கவும். அவை நிறம் மாறத் தொடங்கியதும், திராட்சையைச் சேர்த்து நன்கு வறுத்து, அவற்றை தனியாக ஒதுக்கி வைக்கவும்
- இப்போது அதே கடாயில் ஒரு கப் நெய்யைச் சேர்க்கவும். நெய் சூடானதும், அடுப்பை அணைத்து விடவும். பின் ஊறவைத்த ரவையைச் சேர்த்து கலக்கவும். ரவை கட்டியாகாமல் இருக்க அதை நன்கு கலக்க வேண்டும்
- ரவையும் நெய்யில் கலந்தவுடன், மீண்டும் அடுப்பை இயக்கி, மிகக் குறைந்த தீயில் ரவையை சமைக்கவும்.
- ரவை முழுவதும் நிறம் மாறி நெய் மேலே மிதக்கும் வரை சமைக்கவும்
- ரவை நன்கு வெந்து மென்மையாக மாறியதும், அதனுடன் கோவாவை சேர்க்கவும். கிரீமி அல்வா செய்முறையில் கோவா மிக அவசியம். இது அல்வாவுக்கு ஒரு கிரீமி அமைப்பை அளிக்கிறது மற்றும் அதன் சுவையையும் அதிகரிக்கிறது. எனவே கோவா காவா ரவையில் கலக்கும் வரை நன்கு கலக்கவும்.
- ரவை நன்கு கலந்தது, நிறம் மாறியதும், அதில் சர்க்கரை சேர்க்கவும். பின்னர் அதில் கெட்டியான பால் சிறிது சேர்க்கவும். சர்க்கரை கரைந்து பால் முழுவதும் உறிஞ்சப்படும் வரை ரவையை நன்கு சமைக்கவும்.
- பால் உறிஞ்சப்பட்டு கெட்டியாக மாறியதும், அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதங்கிய பிறகு, நெய்யில் வறுத்த உலர்ந்த பழங்களைச் சேர்த்து அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான், கிரீமி மற்றும் சுவையான ரவா ஹல்வா தயார்.
மேலும் படிக்க: 15 நிமிடத்தில் பட்டென செய்யக்கூடிய மொறு மொறுப்பான ரவை வடை
இதை பிரசாதமாக பரிமாறலாம் மற்றும் சாப்பிட்ட பின்னர் டெஸ்ஸர்ட் ஆக சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பலகாரமாக இந்த அல்வா இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்ககூடிய உணவாக இது அமைந்துள்ளது.

டாபிக்ஸ்