Crab Rasam : நச்சுன்னு சாப்பிடலாம் இப்டி செஞ்சா நண்டு ரசம்! சளியை அடித்து விரட்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Crab Rasam : நச்சுன்னு சாப்பிடலாம் இப்டி செஞ்சா நண்டு ரசம்! சளியை அடித்து விரட்டும்!

Crab Rasam : நச்சுன்னு சாப்பிடலாம் இப்டி செஞ்சா நண்டு ரசம்! சளியை அடித்து விரட்டும்!

Priyadarshini R HT Tamil
Published Feb 21, 2024 02:00 PM IST

Crab Rasam : நச்சுன்னு சாப்பிடலாம் இப்டி செஞ்சா நண்டு ரசம்! சளியை அடித்து விரட்டும்!

Crab Rasam : நச்சுன்னு சாப்பிடலாம் இப்டி செஞ்சா நண்டு ரசம்! சளியை அடித்து விரட்டும்!
Crab Rasam : நச்சுன்னு சாப்பிடலாம் இப்டி செஞ்சா நண்டு ரசம்! சளியை அடித்து விரட்டும்!

சீரகம் – அரை ஸ்பூன்

பூண்டு – 5 பல்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 2

மல்லித்தண்டு – 4

சின்ன வெங்காயம் – 10

புளி – எலுமிச்சை அளவு ஊறவைத்து கரைத்தது

தக்காளி – 1 கரைத்தது

உப்பு- தேவையான அளவு

நண்டு கால்கள் – 6

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மல்லித்தண்டு, சின்னவெங்காயம் என அனைத்தையும் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

புளியை கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தக்காளியையும் மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவையனைத்தையும் ஒரு சட்டியில் சேர்த்து, தண்ணீருடன் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நண்டு கால்களை அரைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த சாற்றை இந்த ரசத்தில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், தாளிப்பு கரண்டியில் எண்ணெய், கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதிக்கும் ரசத்தில் சேர்க்க வேண்டும்.

அனைத்தும் நன்றாக கொதித்த பின் மல்லித்தழை, பெருங்காயத்தூள் தூவி இறக்க வேண்டும்.

சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். நெஞ்சில் உள்ள சளியை கரைத்து வெளியே எடுத்துக்கொண்டு வந்துவிடும். 

இதனால், சளி, இருமல், மூச்சுத்திணறல் என அனைத்தையும் சரிசெய்ய முடியும். 

நண்டின் நன்மைகள்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நண்டை அதிகம் எடுத்துக்கொள்வார். உடலுக்கு சூட்டை தருவதால், இது சளி, நெஞ்சுசளிக்கு மிகவும் நல்லது.

மழைக்காலத்தில் நண்டை சூப் அல்லது ரசம் வைத்து சாப்பிட்டால் மழைக்கால சளி, இருமல் தொல்லைகளில் இருந்த தப்பிக்கலாம். உடலுக்கு அதிக சூட்டை தரும் என்பதால், இதை எடுத்துக்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்டில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதனால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இதில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள், செலினியம், காப்பார் என அனைத்து சத்துக்களும் உள்ளது. இதய நோயாளிக்கு நண்டு மிகவும் நல்லது.

இறைச்சி உணவு உண்ணாதவர்களுக்கு கூட கடல் உணவுகள் மிகவும் சிறந்தது. இது வழக்கமான ரசம்போலவே இருக்கும். அதனால் இதை யார் வேண்டுமானாலும் எடுத்துகொள்ளலாம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9