Cowpeas Rice : தட்டைப்பயிறு சாதம்; சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cowpeas Rice : தட்டைப்பயிறு சாதம்; சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி!

Cowpeas Rice : தட்டைப்பயிறு சாதம்; சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி!

Priyadarshini R HT Tamil
May 05, 2024 12:00 PM IST

Cowpeas Rice : தட்டைப்பயிறு சாதம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இதோ இங்கு ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

Cowpeas Rice : தட்டைப்பயிறு சாதம்; சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி!
Cowpeas Rice : தட்டைப்பயிறு சாதம்; சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி!

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

தட்டைப்பயறு – அரை கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித் தூள் – அரை ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கொத்தமல்லி தழை – கைப்பிடியளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க தேவையான பொருட்கள்

இஞ்சி – அரை இன்ச்

பூண்டு பற்கள் – 6

சின்ன வெங்காயம் – 4

சோம்பு – ஒரு ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 4

கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை

மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றி சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவேண்டும்.

பின் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

தக்காளியை தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவேண்டும்.

புழுங்கல் அரிசியை இரண்டு முறை கழுவிக் கொள்ளவேண்டும். பின் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.

குக்கரில் எண்ணெய்விட்டு சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் சீரகம் சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் பாதி வதங்கியதும், அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.

பின் தக்காளி விழுதை சேர்த்து தொடர்ந்து, அடிபிடிக்காமல் வதக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பிரட்டி, மல்லித்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.

பின் உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை வதக்கவேண்டும்.

பின் ஊறவைத்து வடிகட்டிய அரிசியை மசாலாவோடு சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

பின் 2 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவேண்டும். 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவேண்டும்.

குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியவுடன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து மெதுவாக கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும்.

காய்ந்த தட்டப்பயறை வைத்து செய்தால் தண்ணீரில் இரண்டு முறை கழுவி 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.

நன்றி - முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன், விருந்தோம்பல்.

 

தட்டைப்பயறின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள்

ஒரு கப் தட்டை பயிரில் 194 கலோரிகள் உள்ளது. இதில் 13 கிராம் புரதம், 0.9 கிராம் கொழுப்பு, 35 கிராம் கார்போஹைட்ரேட், 11 கிராம் நார்ச்சத்து, 88 சதவீதம் ஃபோலேட், 50 சதவீதம் காப்பர், 28 சதவீதம் தியாமின், 23 சதவீதம் இரும்பு, 21 சதவீதம் பாஸ்பரஸ், 21 சதவீதம் மெக்னீசியம், 20 சதவீதம் சிங்க், பொட்டாசியம் 10 சதவீதம், வைட்டமின் பி6 10 சதவீதம், செலினியம் 8 சதவீதம், ரிபோஃப்ளேவின் 7 சதவீதம் உள்ளது.

எடை மேலாண்மை

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

செரிமானத்துக்கு உதவுகிறது

சரும ஆரோக்கியம்

தொற்றுக்ளை கட்டுக்குள் வைக்கிறது

கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பத்தை எதிர்நோக்குபவர்களுக்கு நல்லது

தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

புற்றுநோயை தடுக்கிறது

அனீமியாவை தடுக்கிறது

எலும்பு ஆரோக்கியம்

நோய் எதிர்ப்புக்கு உதவுகிறது

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.