தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Corporate Relationship : நீங்கள் கார்ப்ரேட் ஊழியரா? நீங்கள் பின்பற்றவேண்டிய நீதியாக சாணக்கியர் கூறுவது என்ன?

Corporate Relationship : நீங்கள் கார்ப்ரேட் ஊழியரா? நீங்கள் பின்பற்றவேண்டிய நீதியாக சாணக்கியர் கூறுவது என்ன?

Priyadarshini R HT Tamil
Jun 25, 2024 07:00 AM IST

Corporate Relationship : நீங்கள் கார்ப்ரேட் ஊழியராக இருந்தால், நீங்கள் பின்பற்றவேண்டிய நீதியாக சாணக்கியர் கூறுவது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Corporate Relationship : நீங்கள் கார்ப்ரேட் ஊழியரா? நீங்கள் பின்பற்றவேண்டிய நீதியாக சாணக்கியர் கூறுவது என்ன?
Corporate Relationship : நீங்கள் கார்ப்ரேட் ஊழியரா? நீங்கள் பின்பற்றவேண்டிய நீதியாக சாணக்கியர் கூறுவது என்ன?

கார்ப்ரேட் ஊழியர்களுக்கான சாணக்கிய நீதி

சாணக்கியர் என்பவர் பழமையான இந்திய தத்துவ ஞானி, பொருளியல் மேதையாவார். இவர் வாழ்க்கைக்காக சில போதனைகள், கொள்கைகள் மற்றும் பயிற்சி பாடங்களை வலியுறுத்திச் சென்றுள்ளார். 

சாணக்கிய நீதி என்பது ஒவ்வொரு கார்ப்ரேட் ஊழியருக்கும் தேவையான அறிவை வழங்குகிறது. கார்ப்ரேட் உலகில் வாழும் நமக்கு சாணக்கியர் அறிவுறுத்திச் சென்றவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கொள்கைகள் மற்றும் திட்டமிடல்

நீங்கள் வேலையை துவங்கும் முன், உங்களிடம் மூன்று கேள்விகளைக் கேளுங்கள். நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்? இதன் முடிவுகள் என்ன? அது வெற்றிபெறுமா? இவைகுறித்து நீங்கள் ஆழமாக சிந்தித்தால், உங்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் தொடர்ந்து செல்லுங்கள்.

சிந்தனை மற்றும் திட்டமிடல் என்பது ஒரு விஷயத்தை துவங்குவதற்கு முன்னர் மிகவும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக கார்ப்ரேட் நிறுவனங்களில் அது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

நீங்கள் புதிய வேலையை துவங்குவதற்கு முன் மேலே குறிப்பிட்டுள்ள 3 கேள்விகளையும் கேட்கவேண்டும். இந்த அணுகுமுறை உங்கள் நடவடிக்கைகள் நோக்கமுள்ளது, சரியாக திட்டமிடப்பட்டது, எதிர்பார்த்த வெளிப்பாடுகளை நிறைவேற்ற முடிந்தது என்பதை உறுதிசெய்யும்.

நேர்மை

ஒருவர் மிகவும் நேர்மையானவராக இருக்கக் கூடாது. நேராக வளரும் மரங்கள்தான் முதலில் வெட்டப்படும்.

எனவே சாணக்கிய நீதி, தலைமைப்பண்பின் முக்கிய குணமாக கோடிட்டு காட்டுவது, நேர்மையும் இருக்கவேண்டும். ஆனால் ராஜதந்திரங்கள் மற்றும் கடும் காரணிகளை ஆராயும் சிந்தனை, கார்ப்ரேட் சவால்களை திறம்பட கையாள உகந்ததாக இருக்கவேண்டும். 

நேர்மை முக்கியம்தான் ஆனால், பணியிடத்தில் எப்போது மற்றும் எங்கே வெளிப்படையாக பேசவேண்டும் என்பது குறித்த கவனம் வேண்டும். உங்கள் ஒவ்வொரு செயலும் கவனமுடன் செய்யப்படவேண்டும்.

மாற்றம்

பாம்பு இல்லாவிட்டாலும், பாம்பு என்றாலே விஷம் நிறைந்தது என்றதான் பொருள், அதேபோல், ஒருவர் இல்லாவிட்டாலும், அவரின் குணம் எப்படிப்பட்டது என்பதை மற்றவர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.

இது உங்களை பலமானவராக சித்தரிப்பதற்கு உதவும். அச்சுறுத்தாத பாம்பு, ஆபத்துக்கள் ஏற்படும் பயத்தை தனது கொடூரமான முகத்தால் சமாளிக்கும். அதேபோல் நீங்கள் கடுமையான நபராக இருக்கவேண்டும். 

அதேநேரத்தில் உறுதியானவராகவும் காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் நீங்கள் உண்மையில் ஆபத்தானவர் கிடையாது. ஒரு பணியிடத்தில் இந்த அணுகுமுறை சவால்களை நீங்கள் கடக்க உதவும். பிரச்னைகள் இல்லாமல் நீக்ஙள் அதிகாரம் செலுத்த உதவும்.

தவறுகளில் இருந்து கற்றல்

அடுத்தவர்களின் தவறுகளில் இருந்து கற்கவேண்டும். நீங்களே அனைத்தையும் செய்ய முடியாது.

இந்த கொள்கை உங்களுக்கு மற்றவர்கள், இதற்கு முன்னர் இருந்தவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதில் கவனம் செலுத்த உதவும். மற்றவர்களின் வெற்றி மற்றும் தவறுகளில் இருந்து கற்றல் என்பது, ஊழியர்கள் அதே தவறை தாங்களும் செய்யாமல் இருப்பதற்கு உதவும். இது ஒவ்வொருவரும், நன்றாக கற்கவும், சிறந்தவற்றை உருவாக்கவும் உதவும். ஒரு நிறுவனத்தில் கற்றல் மற்றும் முன்னேற்றம் ஆகிய அனைத்தும் இருக்கவேண்டும். அப்போதுதான் நிறுவனமும் நன்றாக வளரும். காலப்போக்கில் வெற்றி பெரும்.

அறம்

பூவின் மணம் காற்று வீசும் திசையில்தான் இருக்கும். ஆனால் ஒரு மனிதர் நல்லவர்கள் என்றால் அவர்க செல்லும் இடமெல்லாம் சிறப்பாகும்.

நேர்மையுடனும் அறத்துடனும் ஒரு பணியாளர் நடந்துகொள்ளவேண்டும். இது கார்ப்ரேட் உறவில் நம்பிக்கை மற்றும் மரியாதையை வளர்க்க உதவும். நீங்கள் நேர்மையுடன் சரியானவற்றைச் செய்து, நன்றாக இருந்து, சத்தியங்களை காப்பாற்றினால், இது மற்றவர்கள் உங்களை சார்ந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. 

இந்த உண்மை, கடுமையான அடித்தளத்தை அமைக்கிறது. இதனால் ஊழியர்களுடன் உங்களால் நன்றாக பணி செய்ய முடிகிறது. இது மற்றவர்கள் உங்களை சார்ந்திருப்பதை காட்டுகிறது. இந்த நம்பிக்கை, உடன் பணிபுரிபவர்கள், கிளையண்ட்கள் மற்றும் பார்ட்னர்களுடன் நல்லுறவை மேம்படுத்துகிறது. இது நல்ல புகழை உருவாக்குகிறது.

நம்பிக்கை எங்கு உள்ளதோ அங்குதான் பணிபுரியவும் அனைவரும் விரும்புவார்கள். நாளடைவில், நேர்மை உங்களுக்கு நேர்மறையான மற்றும் நீண்டகால தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே அது இருதரப்புக்கும் நன்மையைத்தரும். உங்கள் பணியிடத்துக்கும் நன்மையைத்தரும்.