கொரோனா வைரஸ் : கொரோனா தடுப்பில் தமிழக அரசின் சொல்லும்,செயல்பாடும் - மருத்துவர் கேள்வி!
கொரோனா வைரஸ் : பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள், அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள் ஒன்றில் கூட ஓடுகின்ற நீரை வைத்து, சோப்பால் கை கழுவும் வசதிகள் இல்லாமல் இருப்பது எப்படி சரியாகும்?

கொரோனா தற்போதைய நிலையில் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை தான். தமிழகத்தில் 2 நாட்களுக்கு முன்னர் 38 பேர் புதிதாக கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரப்பும் தன்மையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 148 பேர். நேற்று இணை நோய்கள் பாதித்த 25 வயது நபர் தமிழகத்தில் கொரோனாவால் இறந்துள்ளார். அவருக்கு எத்தனை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்ற விவரம் பொதுவெளியில் இல்லை. நேற்று தினம் எத்தனை பேர் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்?
இந்நிலையில், துணை-முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நல்ல செய்தியே.
இருப்பினும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? கொரோனா பாதிப்பு இல்லையா? என்ற விவரம் இல்லை. கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர், கைகளை அடிக்கடி சோப்பால் கழுவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதனால் கையில் உள்ள கிருமிகள் சாவதற்கும், வெளியேறுவதற்கும், கைகளை சோப்பால் கழுவுவது நல்லது.