Coriander Leaves Rice : மணமணக்கும் மல்லித்தழையில் இப்படி ஒரு சாதம் செய்து சாப்பிட்டு பாருங்களேன்! அடடா என்பீர்கள்!
Coriander Leaves Rice : மணமணக்கும் மல்லித்தழையில் இப்படி ஒரு சாதம் செய்து சாப்பிடுங்களேன். சுவை அசத்தலாக இருக்கும்.
அனைத்து உணவுகளையும் மணக்கவைக்கும் மல்லித்தழை, மல்லித்தழையில் சாதம் எப்படியிருக்கும்.
தேவையான பொருட்கள்
மல்லித்தழை – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கடலை – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
வேகவைத்த சாதம் – ஒரு கப்
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைபருப்பு சேர்த்து பொரியவிடவேண்டும். கடலை சேர்த்து வறுக்கவேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொரிந்தவுடன், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
மல்லித்தழை வதங்கிய பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையில் அசத்தும் மல்லி சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல் மட்டும் போதும். வேறு காய்கறிகளும் வைத்து சாப்பிட சுவை அள்ளும்.
இது ஒரு சிறந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
கொத்தமல்லி இலைகள்
நாம் எந்த உணவு செய்தாலும், கடைசியில் மல்லித்தழைகளை தூவிதான் இறக்குவோம். அந்த வகையில் மல்லித்தழை காலை முதல் இரவு வரை நாம் உண்ணும் அனைத்து வகை உணவிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.
சுவையும், மணமும் நிறைந்த மல்லி உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இதன் இலைகள் மற்றும் விதைகளும் காயவைக்கப்பட்டு நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து உணவிலும் கலந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கொத்தமல்லித்தழையின் அனைத்து பாகங்களும் உட்ககொள்ளகூடிய ஒன்றுதான்.
இது இத்தாலியில் தோன்றிய ஒரு மூலிகை தாவரம், ஆனால், இந்திய உணவுகளில் நீக்கமற நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு ஆச்சர்யமளிக்கும் செய்தியாக இருக்கலாம்.
மல்லித்தழையில் உள்ள எண்ணெய் சத்துக்கள் நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்ஜைக்கு எதிரான உட்பொருட்கள் நிறைந்தது.
மல்லித்தழை பதற்றத்தை குறைத்து உறக்கத்தை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டது.
இதன் கிருமிகளுக்கு எதிரான குணங்கள், உணவுகளில் ஏற்படும் நோய் கிருமிகளைக் கொல்கிறது.
மல்லித்தழைகளை நாம் உட்கொள்ளும்போது, அது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது உதவுகிறது.
கொத்தமல்லித்தழையில் உள்ள சத்துக்கள்
மல்லித்தழையில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துகள், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின் கே மற்றம் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
100 கிராம் மல்லித்தழையில், 31 கலோரிகள் உள்ளது. 2 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 146 மில்லி கிராம் கால்சியம், 5.3 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள், 4.7 கிராம் நார்ச்சத்துக்கள், 24 மில்லி கிராம் வைட்டமின் சி, 635 மில்லி கிராம் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன.
மல்லித்தழையில் உள்ள நன்மைகள்
கண் பார்வையை கூராக்குகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சரும ஆரோக்கியத்தை உயர்த்துகிறது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மூளையை பாதுகாக்கிறது.
தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.
டாபிக்ஸ்