தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coriander Leaves Juice : கெட்ட கொழுப்பை வெளியேற்றி, இதய நோய்கள் வராமல் தடுக்க காலையில் முதல் பானமாக இந்த ஜூஸ்!

Coriander Leaves Juice : கெட்ட கொழுப்பை வெளியேற்றி, இதய நோய்கள் வராமல் தடுக்க காலையில் முதல் பானமாக இந்த ஜூஸ்!

Priyadarshini R HT Tamil
Jun 11, 2024 02:00 PM IST

Coriander Leaves Juice : கெட்ட கொழுப்பை வெளியேற்றி, இதய நோய்கள் வராமல் தடுக்க காலையில் முதல் பானமாக மல்லித்தழைச் சாறை பருகுங்கள். அதை செய்யும் முறையையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Coriander Leaves Juice : கெட்ட கொழுப்பை வெளியேற்றி, இதய நோய்கள் வராமல் தடுக்க காலையில் முதல் பானமாக இந்த ஜூஸ்!
Coriander Leaves Juice : கெட்ட கொழுப்பை வெளியேற்றி, இதய நோய்கள் வராமல் தடுக்க காலையில் முதல் பானமாக இந்த ஜூஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கொத்தமல்லி இலைச்சாறு உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பை அடித்து வெளியேற்றி, ஹெச்டிஎல் என்ற நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்

கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு

புதினா – 10 – 15

எலுமிச்சை – அரைப்பழம்

இஞ்சி – ஒரு இன்ச்

செய்முறை

நன்றாக கழுவி சுத்தம் செய்த கொத்தமல்லி இலைகள், புதினா, இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவேண்டும்.

பின்னர் வடித்துவிட்டு, அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறை சேர்த்து கலக்கவேண்டும்.

இதை அப்படியே பருக சிலருக்கு கஷ்டமாக இருக்கும். அப்படியே பருகுவதுதான் நல்லது. முடியாதவர்கள் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும்.

கொத்தமல்லி இலைகள்

நாம் எந்த உணவு செய்தாலும், கடைசியில் மல்லித்தழைகளை தூவிதான் இறக்குவோம். அந்த வகையில் மல்லித்தழை காலை முதல் இரவு வரை நாம் உண்ணும் அனைத்து வகை உணவிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.

சுவையும், மணமும் நிறைந்த மல்லி உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இதன் இலைகள் மற்றும் விதைகளும் காயவைக்கப்பட்டு நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து உணவிலும் கலந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கொத்தமல்லித்தழையின் அனைத்து பாகங்களும் உட்கெர்ள்ளகூடிய ஒன்றுதான்.

இது இத்தாலியில் தோன்றிய ஒரு மூலிகை தாவரம், ஆனால், இந்திய உணவுகளில் நீக்கமற நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு ஆச்சர்யமளிக்கும் செய்தியாக இருக்கலாம்.

மல்லித்தழையில் உள்ள எண்ணெய் சத்துக்கள் நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்ஜைக்கு எதிரான உட்பொருட்கள் நிறைந்தது.

மல்லித்தழை பதற்றத்தை குறைத்து உறக்கத்தை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டது.

இதன் கிருமிகளுக்கு எதிரான குணங்கள், உணவுகளில் ஏற்படும் நோய் கிருமிகளைக் கொல்கிறது.

மல்லித்தழைகளை நாம் உட்கொள்ளும்போது, அது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது உதவுகிறது.

கொத்தமல்லித்தழையில் உள்ள சத்துக்கள்

மல்லித்தழையில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துகள், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின் கே மற்றம் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. 

100 கிராம் மல்லித்தழையில், 31 கலோரிகள் உள்ளது. 2 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 146 மில்லி கிராம் கால்சியம், 5.3 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள், 4.7 கிராம் நார்ச்சத்துக்கள், 24 மில்லி கிராம் வைட்டமின் சி, 635 மில்லி கிராம் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன.

மல்லித்தழையில் உள்ள நன்மைகள்

கண் பார்வையை கூராக்குகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சரும ஆரோக்கியத்தை உயர்த்துகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மூளையை பாதுகாக்கிறது.

தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்