தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coriander Leaves Chutney : முருகன் இட்லிக்கடை மல்லிச்சட்னி! 10 இட்லிகூட பட்டுன்னு காலியாகும் சுவையில் அசத்தும்!

Coriander Leaves Chutney : முருகன் இட்லிக்கடை மல்லிச்சட்னி! 10 இட்லிகூட பட்டுன்னு காலியாகும் சுவையில் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Jul 05, 2024 10:30 AM IST

Coriander Leaves Chutney : முருகன் இட்லிக்கடை மல்லிச்சட்னி சாப்பிட்டு இருக்கிறீர்களா? 10 இட்லிகூட பட்டுன்னு காலியாகும் சுவையில் அசத்தும் அந்த சட்னி செய்வது எப்படி?

Coriander Leaves Chutney : முருகன் இட்லிக்கடை மல்லிச்சட்னி! 10 இட்லிகூட பட்டுன்னு காலியாகும் சுவையில் அசத்தும்!
Coriander Leaves Chutney : முருகன் இட்லிக்கடை மல்லிச்சட்னி! 10 இட்லிகூட பட்டுன்னு காலியாகும் சுவையில் அசத்தும்!

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

ட்ரெண்டிங் செய்திகள்

இஞ்சி – ஒரு இன்ச்

பூண்டு – 4 பல்

பச்சை மிளகாய் -3

வர மிளகாய் – 5

தக்காளி – 5

புளி – ஒரு சிறிய துண்டு

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – ஒரு கட்டு (சுத்தம் செய்து தண்டுடன் நறுக்கிக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடலை பருப்பு, உளுந்து, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் அதில் பச்சை மிளகாய், வர மிளகாய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து நன்றாக மீண்டும் வதக்கவேண்டும். அதில் சுத்தம் செய்து நறுக்கிய ஒரு கட்டு மல்லித்தழையை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவேண்டும்.

ஆறிய பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் சேர்க்காவிட்டால் கூட நன்றாகத்தான் இருக்கும்.

தக்காளி மற்றும் மல்லித்தழை இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக வதக்கவேண்டும். அதிகம் குழைவாக வதக்கக்கூடாது. 

இந்த சட்னியில் வரமிளகாய் ஒன்றிரண்டாக அரைபட்டு இருப்பதுதான் இந்த சட்னியின் கூடுதல் சுவைக்கு காரணம். இதில் வெங்காயம் சேர்க்கக்கூடாது.

சட்னியை அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அந்த சட்னியில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

இதை வைத்துக்கொண்டு சாப்பிட்டால், 10 இட்லி கூட பட்டுன்னு சாப்பிடலாம். தோசை, பொங்கல், உப்புமா என அனைத்துக்கும் ஏற்ற சைட் டிஷ் இந்த சட்னி.

கொத்தமல்லி இலைகள்

நாம் எந்த உணவு செய்தாலும், கடைசியில் மல்லித்தழைகளை தூவிதான் இறக்குவோம். அந்த வகையில் மல்லித்தழை காலை முதல் இரவு வரை நாம் உண்ணும் அனைத்து வகை உணவிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.

சுவையும், மணமும் நிறைந்த மல்லி உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இதன் இலைகள் மற்றும் விதைகளும் காயவைக்கப்பட்டு நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து உணவிலும் கலந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கொத்தமல்லித்தழையின் அனைத்து பாகங்களும் உட்ககொள்ளகூடிய ஒன்றுதான்.

இது இத்தாலியில் தோன்றிய ஒரு மூலிகை தாவரம், ஆனால், இந்திய உணவுகளில் நீக்கமற நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு ஆச்சர்யமளிக்கும் செய்தியாக இருக்கலாம்.

மல்லித்தழையில் உள்ள எண்ணெய் சத்துக்கள் நுண்ணுயிர்கள் மற்றும் பூஞ்ஜைக்கு எதிரான உட்பொருட்கள் நிறைந்தது.

மல்லித்தழை பதற்றத்தை குறைத்து உறக்கத்தை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டது.

இதன் கிருமிகளுக்கு எதிரான குணங்கள், உணவுகளில் ஏற்படும் நோய் கிருமிகளைக் கொல்கிறது.

மல்லித்தழைகளை நாம் உட்கொள்ளும்போது, அது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது உதவுகிறது.

கொத்தமல்லித்தழையில் உள்ள சத்துக்கள்

மல்லித்தழையில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துகள், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின் கே மற்றம் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.

100 கிராம் மல்லித்தழையில், 31 கலோரிகள் உள்ளது. 2 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 146 மில்லி கிராம் கால்சியம், 5.3 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள், 4.7 கிராம் நார்ச்சத்துக்கள், 24 மில்லி கிராம் வைட்டமின் சி, 635 மில்லி கிராம் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன.

மல்லித்தழையில் உள்ள நன்மைகள்

கண் பார்வையை கூராக்குகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சரும ஆரோக்கியத்தை உயர்த்துகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மூளையை பாதுகாக்கிறது.

தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.

டாபிக்ஸ்