குளிருக்கு இதமான தேநீர்! இனி தினமும் இதுதான் கோடை வரும் வரை! சளி, இருமல், காய்ச்சலை அண்டவிடாது!
குளிருக்கு இதமான தேநீர், இனி தினமும் இதுதான் கோடை வரும் வரை. சளி, இருமல், காய்ச்சலை அண்டவிடாது. தொற்றுக்களை துரத்தும் இந்த தேநீரை செய்வதும் எளிதுதான். இதைச் செய்வதற்கு வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே போதுமானது. இதை செய்வது எப்படி என்று பாருங்கள் .
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
குளிர்க் காலத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். இதனால் காற்றில் ஈரப்பதம் உயர்ந்து, உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய தொற்றுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தொண்டை வறட்சி, தொண்டையில் தொற்று என ஏற்படலாம். அதற்கு இந்த ஒரு டீயை நீங்கள் தினமும் வழக்கமாக பருகும் டீக்கு பதில் பருகவேண்டும்.
தேவையான பொருட்கள்
மிளகு – கால் ஸ்பூன்
கிராம்பு – 4
ஏலக்காய் – 1
பட்டை – ஒரு இன்ச்
சுக்கு – சிறிய துண்டு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
துளசி இலைகள் – 8
செய்முறை
மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சுக்கு என அனைத்தையும் சிறிய உரலில் சேர்த்து இடித்துக்கொள்ளவேண்டும். இவற்றை ஒரு இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து அடுப்பில் வைக்கவேண்டும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இறக்கும்போது 8 துளசி இலைகளை சேர்த்து சிறிது நேரம் மூடிவிட்டு, பின்னர் வடிகட்டி பருகவேண்டும்.
இதை அப்படியே பருகலாம், ஆனால் சுவைக்காக தேன், பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து பருகவேண்டும்.
இது மழைக்கும், மனதுக்கும் இதமளிக்கும். மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் உங்களை அண்டவிடாமல் காக்கும். எனவே தினமும் மாலையில் பருகும் வழக்கமாக தேநீருக்கு பதில் இதை பருகிக்கொள்ளவேண்டும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்