Cooking Oil : சமையல் எண்ணெயில் உள்ள கலப்படம்; பாக்கெட் எண்ணெய் நல்லதா? அலசும் நிபுணர்!
Cooking Oil : சமையல் எண்ணெயில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து அறிவியல் நிபுணர் ஷோபனா நாராயணன் என்பவர் விளக்குகிறார்.

உண்மையில் நாம் தினமும் உண்ணும் எண்ணெயில் என்ன கலந்துள்ளது? என்பது குறித்து அறிவியல் நிபுணர் ஷோபனா நாராயணன் விளக்குகிறார். இதுகுறித்து சேப்பியன் சயின்ஸ் என்ற யூடியூப் தளத்தில் விளக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது,
எண்ணெய்
ஆரம்ப காலத்தில் எண்ணெய் என்பதை விலங்குகளின் கொழுப்பு அதாவது நெய்யை என்பதில் இருந்து நாம் பயன்படுத்தி வந்தோம். அடுத்த விதைகளில் இருந்து எண்ணெய்களை எடுத்து பயன்படுத்த கற்றுக்கொண்டோம். எண்ணெயை பிரித்தெடுக்க மரச்செக்கு போன்ற கருவிகளை பயன்படுத்தி சிறிய அளவில் எண்ணெய் உற்பத்தி நடைபெற்றது. காலனி ஆதிக்கத்துக்குப்பின்னர் தொழில்சாலைகளில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி நடைபெற்றது.
எண்ணெய் வித்துக்கள்
எண்ணெய் எந்த வித்துக்களில் இருந்து எடுக்கப்படுகிறது என்பது அந்தந்த நாடுகளில் உள்ள சீதோஷ்ண நிலையைப் பொருத்து மாறும். பெரும்பாலும் சூரியகாந்தி பூக்களில் இருந்து பெறப்படும் எண்ணெயை நாம் ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து கிடைக்கிறது. நமது நாட்டில் கடலை எண்ணெய், எள் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை கிடைக்கிறது. வட இந்தியாவில் கடுகு எண்ணெய் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஆலிவ் எண்ணெய் பரவலாக உள்ளது. பழங்கள் மற்றும் விதைகள் இரண்டில் இருந்தும் எண்ணெய்கள் கிடைக்கிறது.
கலப்படம்
இந்த எண்ணெய் செக்கில் இருந்து எடுக்கும் வரை எவ்வித கலப்படம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து நாம் வணிக ரீதியான எண்ணெய் விற்பனை நம்மை வந்தடைந்தபோது பரவலாக அதில் பெட்ரோலியப் பொருட்கள் கலக்கப்படுவதாக வதந்திகள் வந்தன. பின்னர் செக்கு எண்ணெய் தான் உடலுக்கு நல்லது என்று கூறப்பட்டது. உண்மையில் எண்ணெயில் கலப்படம் நடந்ததா?
சில எண்ணெய் வித்துக்களில் இருந்து நமக்கு குறைவான அளவே எண்ணெய் கிடைக்கும். அப்போது அதிக எண்ணெயை தரக்கூடிய விதைகளில் இருந்து எண்ணெயை எடுத்து கலப்படம் நடைபெற்றது. அதற்கு எளிய விலையில் கிடைக்கும் எண்ணெயை விலை உயர்ந்த எண்ணெய் கலக்கப்பட்டது.
வெஜிடபிள் குரூட் ஆயில்
வெஜிடபிள் குரூட் ஆயில் என்பது, கடலையை செக்கில் ஆட்டி எடுக்கும்போது கசடுகளுன் கிடைப்பதுதான் வெஜிடபிள் குரூட் ஆயில். அதை நாம் ரீஃபைண்ட் செய்யும்போது, அதன் அடர்த்தி குறையும். நாம் அதற்கு வேதிப்பொருட்களை பிரித்து எடுக்கிறோம். அதற்காக பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் அந்த வேலை முடிந்த பின்னர் அதிலிருந்து மறைந்துவிடும். ஆனால் சில நேரங்களில் அதிலே தங்கிவிடுவதும் உண்டு. அப்படி இருந்தால் அந்த எண்ணெயை தர பரிசோதனையில் நீக்கப்படும்.
ஹெக்சேன் என்ற வேதிப்பொருள்தான் எண்ணெயைப் பிரித்தெடுக்கப்பயன்படுகிறது. இது பரிசோதனையில் தெரியவந்தால் அதுதான் பெட்ரோலியம் பொருள் கலக்கப்படுவதாக வதந்தியாக வருவது. ஆனால் பராஃபீன் போன்ற கசடு பொருட்கள் சமையல் எண்ணெயில் கலக்கப்படுவதில்லை என்பதைத்தான் ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
வேறு என்ன எண்ணெய்
பிரம்ம தண்டு என்ற களைச் செடியில் உள்ள விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்தான் சமையல் எண்ணெயில் கலக்கப்படுகிறது. இந்த தாவரத்தை மேய்ச்சல் விலங்குகள் கூட உண்ணாது. இந்திய உணவுக்கழகம் பரிசோதித்து அந்த கலப்படத்தையும் தடுத்துள்ளார்கள். அந்த எண்ணெய் தீவிர இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உருவாக்குவதாக இருந்தது. கடைகளில் பாக்கெட்களில் எண்ணெய் வாங்காமல், நேரடியாக எண்ணெய் வாங்கிய காலத்தில் இந்த கலப்படம் அதிகம் நடந்துள்ளது. ஆனால் பாக்கெட் எண்ணெய்களில் இதுபோன்ற கலப்படம் தடுக்கப்பட்டுள்ளது.
கடுகு எண்ணெயையும் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவற்றில் கலந்துள்ளார்கள். அதுவும் தடுக்கப்பட்டுள்ளது. எனவே பாக்கெட் எண்ணெய்களை அச்சமின்ற மக்கள் வாங்கலாம். ரீஃபைன்ட் எண்ணெயில் சில சத்து இழப்புகள் உள்ளது. ஆனால் அதில் பெட்ரோலிய பொருட்களும் கலக்கப்படவில்லை.
விலை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெக்கான வரி குறைவே அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் விலை குறைவுக்கு காரணம். அதிலும் கலப்படம் இல்லை. அங்கு விளையும் வித்துக்கள் அதிகம் உள்ளது. நம் நாட்டில் அதே அளவில் விளையும் வித்துக்கள் குறைவாக உள்ளதால் நமது நாட்டில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. பெட்ரோலிய பொருட்கள் சமையல் எண்ணெயில் கலக்கப்படுவதில்லை.
மினரல் ஆயில் என்பது சருமத்தில் நாம் பயன்படுத்தும் எண்ணெயில் கலக்கிறார்கள். பாதாம் எண்ணெய், வைட்டமின் எண்ணெய் போன்றவை உங்கள் சருமத்தில் வாசலீன் போன்றது என்பதுதான். அதை நாம் உட்கொள்வதில்லை என்பதால் அது உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. ரிஃபைண்ட் ஆயில் என்பது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மட்டுமே. அதில் எவ்வித கலப்படமும் இல்லை.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்