Cooking Hacks: சுண்டலை ஊற வைக்க மறந்துவிட்டீர்களா? உடனே சமைக்க சில வழிகள் இருக்கிறது!
Cooking Hacks: சுண்டல் சரியாக வேகவில்லை என்றால் நமக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே சுண்டல் சமைக்கும் போது குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து பின் உபயோகிக்க வேண்டும்.

சுண்டல் போன்ற பருப்பு வகைகளில் புரதம் , நார்ச்சத்து மற்றும் பல வைட்டமின்கள் போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. ஆனால் பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் தானியங்களில் அதிக அளவு பைடிக் அமிலம் உள்ளது, இது செரிமான பிரச்சனைகள் மற்றும் மனிதர்களுக்கு சில ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இதனை ஒருமுறை உட்கொண்டால், இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட தாதுக்களை உறிஞ்சும் உடலின் திறனை இவை குறைக்கின்றன. எனவே, சரியாக இவை வேகப் பட வைக்காமல் இருந்தால் அது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எட்டு மணி நேரம் வரை ஊறவைத்த பிறகு, சுண்டல் போன்றவற்றை தயார் செய்வது அவசியம்.
அப்படியிருந்தும், திடீரென்று சமையல் செய்ய வேண்டிய சூழல்களில் என்ன செய்வது? கொண்டைக்கடலையை முன்கூட்டியே ஊறவைக்காமல் சமைக்க சில வழிகள் உள்ளன. இந்த வழிகளை சில முறைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதே முறையில் அடிக்கடி சமைப்பதும் ஆபத்து தான்.
பிரஷர் குக்கரில் சமைக்கவும்
நீராவி மற்றும் குக்கரின் உயர் அழுத்தத்தை பயன்படுத்தி சுண்டலை எளிமையாக சமைக்கலாம் . பிரஷர் குக்கரில் தேவையான அளவு சுண்டல் மற்றும் அதே அளவு மூன்று மடங்கு தண்ணீர் சேர்க்கவும். அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்கவும். இது சுந்தலை வேகமாக வேக வைக்க உதவும். பிறகு அதிக தீயில் 6 முதல் 7 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர் மிதமான தீயில் குக்கர் மூடியை துறந்து பின்னர் மற்றொரு 10-15 நிமிடங்களுக்கு வேக விடவும். வேக வைத்த பிறகு திறந்து பயன்படுத்தலாம்.
சூடான நீர் மற்றும் உப்பு
கொண்டைக்கடலையை நன்கு கழுவிய பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கழுவிய கொண்டைக்கடலையை சேர்த்து வெந்நீர் சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். அதை மூடி, குறைந்தது ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு இதனை எடுத்து கறியில் போட்டு சமைக்கவும்.
கொதிக்க விடவும்
முதலில் கொண்டைக்கடலையை நன்றாகக் கழுவவும். ஒரு பாத்திரத்தில், இதனைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கொதித்த பிறகு. தீயை அணைத்து, பானையை ஒரு மூடியால் மூடி வைக்கவும். இந்த சூடான நீரில் 1-2 மணி நேரம் வைக்கவும். இது ஒரே இரவில் ஊறவைப்பது போல் பயனுள்ளதாக இருக்காது, ஆனால் சுண்டலை குறைந்த நேரத்தில் சமைக்க உதவும்.
ஐஸ் கட்டிகள்
நீங்கள் ஐஸ் க்யூப்ஸ்களை வைத்து சுண்டல் செய்யலாம். இதற்கு முதலில் கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். நீராவி முற்றிலும் போன பிறகு திறக்கவும். அதில் ஐஸ் கட்டிகள் மற்றும் குளிர்ந்த நீர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைக்கவும். ஏழு அல்லது எட்டு விசில் வரும் வரை சமைக்கவும். இப்படி செய்தால் சுண்டல் ஊறவைப்பது போல் வெந்து விடும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்