Constipation : மலச்சிக்கலால் அவதியா? இதே எளிய தீர்வு – பாரம்பரிய இயற்கை மருத்துவர் கூறுவது என்ன?
Constipation : மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இயற்கை பாரம்பரிய மருத்துவர் கூறும் தீர்வு என்ன?

மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு தீர்வாக பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறிய தகவல்களைப் பாருங்கள்.
மனச்சிக்கல் உள்ள மக்களுக்கு மலச்சிக்கல் இயல்பாகவே இருக்கும். மேலும் பசிக்காமல் சாப்பிடுபவர்களுக்கும், அகால வேலைகளில் உணவு உண்பவர்களுக்கும், நொறுக்கு தீனி வகைகள் அதிகம் உண்பவர்களுக்கும், அதிகமான உடல் சூடு உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். இவர்களுக்கு இது நாள்பட்ட தொல்லையாக இருக்கும். ஒருவர் எவ்வித சிரமும் இன்றி காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் இலுகுவாக மலம் கழிக்கவேண்டும். அதை உங்களால் சரிவ செய்ய முடியாமல் போனால் அது மலச்சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக ஒன்று மட்டும் இருக்கும். அது என்னவென்று இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறும் எளிய தீர்வைப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
நிலவாகை இலை - 50 கிராம்
கடுக்காய் தோல் - 50 கிராம்
அம்மான் பச்சரிசி- 25 கிராம்
செய்முறை
நிலவாகை (நிலவாகை என்பது நில ஆவாரை தான், ஆவாரம் செடி என்று நம் எல்லோராலும் அழைக்கப்படும் மஞ்சள் நிறத்தில் பூக்கும் தாவரம்) இலை, கடுக்காய்த் தோல், அம்மான் பச்சரிசி ஆகியவைகளை நிழலில் உலர்த்தி, மிக்ஸி ஜாரில் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்னர் இந்த பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து சூடாக பருக வேண்டும்.
மேலும் இரவு உறங்கச் செல்லும் பத்து உலர்ந்த திராட்சைகளை இதமான சூடு உள்ள ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து விடவேண்டும்.
மறுநாள் காலை ஊறிய திராட்சைகளை எடுத்து சாப்பிட்டுவிட்டு அந்த தண்ணீரையும் பருகி விடவேண்டும். பசித்தால் மட்டும் உணவு உண்ணவேண்டும்.
தவிர்க்கவேண்டியது என்ன?
டீ, காபி, பால், இடைவேளை உணவுகள், நொறுக்கு தீனிகள், வெளி உணவுகள், ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது மலச்சிக்கல் நீங்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்