Constipation Remedy : பலச்சிக்கலை ஏற்படுத்தும் மலச்சிக்கலை விரட்டியடிக்கும் வீட்டு தீர்வுகள் இவைதான்!
Constipation Remedy : மலச்சிக்கல் பிரச்னைகள் இருந்தால் உடலில் பலச்சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். அவற்றை போக்க இந்த இயற்கை முறைகளை கடைபிடியுங்கள். மலச்சிக்கலை போக்குவது அத்தனை சுலபம் கிடையாது. எனவே கவனமாக சில தீர்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.

மலச்சிக்கல் உடலில் பலச்சிக்கலை ஏற்படுத்தும். உங்களால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் மலம் கழிக்க முடியவில்லையென்றால், நீங்கள் உடனடியாக வீட்டிலிருந்து பெறக்கூடிய தீர்வுகளை கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும். மலச்சிக்கல் பிரச்னை குறித்து பாலிவுட்டில் ஒரு சினிமாவே வந்துள்ளது.
அந்தளவுக்கு இது உலகளவில் பலர் எதிர்கொள்ளும் பிரச்னைதான். இதை தீர்க்க நீங்கள் வீட்டிலிருந்தே சிலவற்றை முயற்சிசெய்யலாம்.
மலச்சிக்கல் பிரச்னைகள் இருந்தால் உடலில் பலச்சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். அவற்றை போக்க இந்த இயற்கை முறைகளை கடைபிடியுங்கள். மலச்சிக்கலை போக்குவது அத்தனை சுலபம் கிடையாது. எனவே கவனமாக சில தீர்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
நமது உணவுப்பழக்கவழக்கங்கள், குடல் செயல்பாடு, மரபணுக்கள் காரணம், சமூகநிலை, அன்றாட பழக்கங்கள், உடல் மற்றும் மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு என்றால், அது சிகிச்சைகள்தான்.
மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்
இன்றைய காலகட்டத்தில் நாம் அமர்ந்துகொண்டே பணிபுரிகிறோம். இதனால் நமது உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. அதில் மலச்சிக்கலும் ஒன்றாக உள்ளது. உடல் உழைப்பு குறைவான பணி நமது செரிமான மண்டலத்தை பாதிக்கச்செய்கிறது.
மலச்சிக்கலால் உலகில் 1 முதல் 80 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். பதற்றம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது மனநிலை மற்றும் குடல் ஆரோக்கியம் இரண்டுக்கும் தொடர்பு உள்ளது. இது வயிறு ஆரோக்கியம் மற்றும் மனநலனுக்கும் உள்ள தொடர்வை காட்டுகிறது.
மலச்சிக்கலுக்கான காரணங்கள்
பயந்த மனநிலை மற்றும் உடற்பயிற்சியின்மை
நீர்ச்சத்து குறைவு
மனஅழுத்தம்
சில மருந்துகள்
நார்ச்சத்துக்கள் குறைவாக எடுப்பது
மனநலக்கோளாறுகள்
தவிர்த்தல்
மலச்சிக்கலால் உங்கள் உடலில் ஏற்படும் பிரச்னைகள்
வறண்ட மலம்
மலம் கழிக்கும்போது வலி
வயிறு உப்பிய உணர்வு
மலம் கழிக்க விரல்களை பயன்படுத்தவேண்டிய நிலை
வாரத்தில் மூன்று நாட்களுக்கும் குறைவாக மலம் கழிப்பது
மலச்கிக்கலைப் போக்கும் வீட்டுத் தீர்வுகள்
குடல் ஆரோக்கியத்தை குலைக்கும் பல்வேறு காரணிகள் குறித்து நமக்கு நன்றாக தெரியும் எனவே மலச்சிக்கலை போக்கும் வழிகளாக பின்வருபவை உள்ளன.
அதிகளவு தண்ணீர் பருகுவது செரிமானத்தை எளிதாக்குகிறது. உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கலை போக்குங்கள்.
நார்ச்சத்து அதிகம் உட்கொள்வது செரிமான எண்சைம்களை நன்றாக வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் நீங்கும்.
தினசரி உடற்பயிற்சிகள் குறிப்பாக வயிறு பகுதிகளுக்கு அழுத்தம் தரும் உடற்பயிற்சிகள் மலச்சிக்கலைப்போக்க உதவும்.
எலுமிச்சைப்பழச்சாறு உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுப்பதுடன் மலச்சிக்கலையும் விரட்டியடிக்கிறது.
மலச்சிக்கலை விரட்டியடிக்க தினமும் பேரிட்சை பழங்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய் போன்ற உணவுகள் உடலில் செரிமானத்தை தூண்ட உதவுகிறது.
இளஞ்சூடான தண்ணீரில் விளக்ணெய்யை சேர்த்து சிறித் எலுமிச்சை சாறுடன் பருகும்போது அது மலக்குடலை முற்றிலும் சுத்தம் செய்கிறது.
திராட்சையில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் மலச்சிக்கலை விரட்டியடிக்க உதவுகிறது.
காபி, மலச்சிக்கலை விரட்டியடிப்பதில் முதன்மை வகிக்கிறது. அதனால்தான் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
கிவி பழங்கள் மலச்சிக்கலை விரட்டியடிக்கும்.
ஃப்ளாக்ஸ் சீட்ஸ்களும் மலச்சிக்கலை துரத்துவதற்கு உதவும். மூன்று மாததத்துக்கு இதை தினமும் 5 கிராம் எடுத்துவந்தால் மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.
உளுந்தும் மலச்சிக்கலை போக்க உதவும்.
வெற்றிலையும் உடலில் செரிமானத்தை ஏற்படுத்தி மலச்சிக்கலைப் போக்கும். அதனால்தான் வெற்றிலையை உணவு உண்டபின் எடுத்துக்கொள்கிறார்கள்.
கொய்யாப்பழங்கள் இதய நோய்களுக்கும் மலச்சிக்கலுக்கும் மாமருந்து.
மது பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் அதிகம் எடுத்தால் மலச்சிக்கல் ஏற்படும். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.
உடலில் செரிமானத்தை அதிகரிக்க
அதின நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக தண்ணீர் பருகவேண்டும்.
நன்றாக உடற்பயிற்சி செய்யவேண்டும்.
உங்கள் மனஅழுத்தத்தை போக்க வேண்டும்.
மலத்தை எப்போதும் கட்டுப்படுத்தக் கூடாது.

டாபிக்ஸ்