தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Constipation Remedy Prevents Constipation Throughout Life A Glass Of This Water Is Enough To Maintain Youth

Constipation Remedy : வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கல் பிரச்னையை தடுத்து; இளமையை பேண ஒரு டம்ளர் இந்த தண்ணீர் போதும்!

Priyadarshini R HT Tamil
Feb 03, 2024 10:39 AM IST

Constipation Remedy : வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கல் பிரச்னையை தடுத்து; இளமையை பேண ஒரு டம்ளர் இந்த தண்ணீர் போதும்!

Constipation Remedy : வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கல் பிரச்னையை தடுத்து; இளமையை பேண ஒரு டம்ளர் இந்த தண்ணீர் போதும்!
Constipation Remedy : வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கல் பிரச்னையை தடுத்து; இளமையை பேண ஒரு டம்ளர் இந்த தண்ணீர் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

பழைய சாதம் சாப்பிடும்போது உடலில் வைட்டமின் பி12 சத்து அதிகரித்து, உடல் சோர்வு நீங்கும். வைட்டமின் டி சத்தும் பழைய சாதத்தில் அதிகம் உள்ளது. நொதிக்க வைத்த பழைய சாதத்தில் வயிற்றுக்கு நன்மையளிக்கும் ப்ரோபயோடிக்குகள் நிறைந்துள்ளது.

இதை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. வயிற்றுக்கு தேவையான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கிடைக்கும்.

இதில் உள்ள வைட்டமின் பி வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றி, அல்சரை குணப்படுத்தும், இதில் இயற்கையாகவே நுண்ணுயிர்கள் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களை உருவாக்கி, உடலின் பிஹெச் அளவை உயர்த்தும்.

இதே சாதத்தில் 5 சின்ன வெங்காயத்தையும் ஊறவைத்த அந்த தண்ணீரை பருகுவது உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது.

இதை 10 நாட்கள் எடுத்துக்கொண்டால், மூலநோய் பிரச்னைகளை குணப்படுத்தும். வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கல் பிரச்னைகளே இருக்கக்கூடாது என்று நினைத்தால் இந்த தண்ணீரை பருகலாம்.

வயிற்றில் அதிகப்படியான அமிலத்தன்மை மற்றும் வாயு தொடர்பான பிரச்னைகள் சிலருக்கு ஏற்படும். இதனால் எதை சாப்பிட்டாலும் அது எதிர்களிக்கும், வயிறு உப்புசம் என பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த நீராகாரத்தை பருகினால், அவர்களுக்கு அது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும்.

இதை தலைக்கு ஒரு கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளித்துவிட்டு, பின்னர் இதை ஊற்றி தலையை அலசி அதை ஒரு கண்டிஷனராகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் உப்பு சேர்க்கக்கூடாது. அது முடிக்கு பளபளப்பைக்கு கொடுத்து, முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்த தண்ணீரை வழக்கமாக பருகி வந்தால், எந்த வித சரும சுருக்கமும் இல்லாமல் 80 வயது வரை வயோதிக தோற்றம் இல்லாமல் அழகுடன் மிளிரலாம். இதில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது. அது உங்கள் உடலில் உயர் ரத்த பிரச்னைகளை கட்டுப்படுத்துகிறது.

இதில் மெக்னீசியச்சத்து நிறைந்துள்ளது. அது செலினியச்சத்துடன் சேர்ந்து எலும்புக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தடுக்கிறது.

முதல் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் பருக வேண்டும். அந்த சாதத்தையும் சாப்பிடலாம். அந்த நீராகாரம் உடலுக்கு வலு சேர்த்து பல்வேறு பிரச்னைகளை சீராக்குகிறது.

இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் தினமும் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

அதற்கு பின்னர் அரை அல்லது ஒரு மணி நேரம் கழித்து டீ, காபி அல்லது காலை உணவு என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பழைய சாதத்தையும் சாப்பிடலாம். எனவே இதை தினமும் எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணலாம். இளமையில் இருந்து நாம் கடைபிடிக்கும் ஆரோக்கியமே முதுமையில் நாம் வளமுடன் வாழ வழி செய்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்