தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Constipation Remedy : மலச்சிக்கலை விரட்டும் இயற்கை சூரணம்! தினமும் ஒரு ஸ்பூன் மட்டும் போதும்!

Constipation Remedy : மலச்சிக்கலை விரட்டும் இயற்கை சூரணம்! தினமும் ஒரு ஸ்பூன் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
May 18, 2024 12:25 PM IST

Constipation Remedy : மலச்சிக்கலை விரட்டும் இயற்கை சூரணம் வீட்டிலேயே செய்யமுடியம். தினமும் ஒரு ஸ்பூன் மட்டும் சாப்பிட்டு வர பலன் கிட்டும்.

Constipation Remedy : மலச்சிக்கலை விரட்டும் இயற்கை சூரணம்! தினமும் ஒரு ஸ்பூன் மட்டும் போதும்!
Constipation Remedy : மலச்சிக்கலை விரட்டும் இயற்கை சூரணம்! தினமும் ஒரு ஸ்பூன் மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, உடல் வலி, உடலி சோர்வு, மூட்டு வலி, கை-கால் வலி, இடுப்பு வலி என எவ்வித பிரச்னைகளில் இருந்தும் எளிதாக விடுபட முடியும். அதற்கு தேவையான சூரணத்தை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

உடல் சோர்வு, உடல் அசதி, கை-கால் வலி, மூளைச் சோர்வு ஆகிய அனைத்தும் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் ஆகியவை உள்ளது. இவற்றை சரிசெய்ய இந்த இயற்கை சூரணத்தை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்

சீரகம் – 4 ஸ்பூன்

ஓமம் – 3 ஸ்பூன்

கிராம் – ஒரு ஸ்பூன்

மிளகு – 3 ஸ்பூன்

சோம்பு – 3 ஸ்பூன்

சுக்குப்பொடி – ஒரு ஸ்பூன்

நெல்லிக்காய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

(நெல்லிக்காய்ப் பொடி வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றை போக்கும்.

செய்முறை

அனைத்து பொருட்களையும் தனித்தனியாக நன்றாக வாசம் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இவையனைத்தையும் ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.

கட்டிப்பெருங்காயம் என்றால், அதை உடைத்து, லேசாக வறுத்து இதனுடன் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன், ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்துப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இந்துப்பு மலச்சிக்கலைப்போக்கும். சுக்குப்பொடி சேர்த்து கலந்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் மிதமான சூடான தண்ணீர் ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் கலந்து பருகவேண்டும். குழந்தைகளுக்கு அரை டம்ளர் தண்ணீரில் கால் ஸ்பூன் கலந்து கொடுக்க வேண்டும்.

இதை சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்தும் பருகலாம். உங்களுக்கு உடல் உபாதைகள் இருக்கும்போதும் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து பருகிவர உங்களுக்கு பலன் கிட்டும். தேவைப்படும்போது பருகிக்கொள்ளுங்கள்.

வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிறு உப்புசம் இல்லாமல் இருந்தாலே போதும். உடலில் கை-கால் வலி, மற்ற இடங்களில் வலி, உடல் சோர்வு போன்றவை இருக்காது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்