Constipation Remedy : மலச்சிக்கலும், மனச்சிக்கலும் இல்லாததே ஆசிர்வதிப்பட்ட வாழ்க்கை; மலச்சிக்கலைப் போக்கும் 9 வழிகள்!
மலச்சிக்கலைப்போக்கும் வழிகளைப் பாருங்கள்.

மனச்சிக்கலின்றி உறங்கச் செல்லவேண்டும். மலச்சிக்கலின்றி எழுந்திருக்கவேண்டும் என்று கூறுவார்கள். அதன்படி உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் அவற்றில் இருந்து விடுபடும் 9 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். மலச்சிக்கல் என்பது செரிமான கோளாறுகளால் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னையாகும். இது வயிறு உப்புசம் மற்றும் அசவுகர்யங்களை ஏற்படுத்துகிறது. இது குடல் இயக்கத்தில் வலி, சிரமம் மற்றும் தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் தொல்லை இருந்தால் அதில் இருந்து விடுபட உதவும் 9 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நீர்ச்சத்து
அதிகளவில் தண்ணீர் பருகுவது உங்கள் உடலுக்கு நல்லது. நாள் முழுவதும் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுத்து மலத்தை இலக்குகிறது. இதனால் உங்களால் எளிதாக மலம் கழிக்க முடிகிறது. உடலில் நீர்ச்சத்துக்கள் குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. எனவே தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
நார்ச்சத்துக்கள்
நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை நீங்கள் உட்கொள்ளும்போது, அது உங்கள் குடல் இயக்கத்தை எளிதாக்கி, மலம் இருகாமல் பார்த்துக்கொண்டு, மலத்தை அதிகரித்து அதை வெளியேற்ற உதவுகிறது. எனவே நீங்கள் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
ப்ரோ பயோடிக்குகளை சாப்பிட வேண்டும்
ப்ரோ பயோடிக்குகள் அதிகம் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளும்போது, அது உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கோகர்ட், தயிர், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும். இது உங்கள் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் வழக்கமாக குடல் இயங்குவது நடக்கிறது.
உடற்பயிற்சிகள்
நீங்கள் எப்போது சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். இது உங்கள் உடலில் உள்ள செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. எனவே எப்போதும் எளிய பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் மலம் குடலில் இருந்து வெளியேறுவது இலகுவாகிறது.
சோம்பு தண்ணீர்
சோம்பு தண்ணீரில் வலிப்பை குறைக்கும் குணங்கள் உள்ளன. இது உங்கள் உடலில் உள்ள தசைகளை அமைதிப்படுத்த உதவும். இது உங்கள் செரிமான மண்டலத்தையும் இலகுவாக்குகிறது. வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. சோம்பு தேநீர் பருகும்போது, அது உங்கள் செரிமான மண்டலத்துக்கு இதமளித்து, உங்களுக்கு மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தையம் போக்கி, அதை வழக்கமாக்குகிறது.
தோப்புக்கரணம்
தோப்புக்கரணம் போடும் பழக்கத்தை நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, அது உங்களுக்கு மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. நீங்கள் தோப்புக்கரணம் போடும்போது, கழிவறையில் அமர்வதைப் போன்றுதான் அமர்ந்து எழுந்திருக்கிறீர்கள். இதனால் உங்களில் செரிமான மண்டலம் சரியாக உதவுகிறது. குடல் இயங்குவதையும் எளிமையாக்குகிறது. இது மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
இசாப்கால்
இசாப்கால் என்பது கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொண்ட ஒரு உணவுப்பொருளாகும். இதை தண்ணீரில் சேர்க்கும்போது, அது நிறைய தண்ணீரை உறிஞ்சி, மலத்தை அதிகரித்து, இளகுவாக்கி வெளியேற்ற உதவுகிறது. இது பொடியாகவும் உள்ளது. இதை நீங்கள் தண்ணீரில் கலந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இயற்கை மலமிலக்கி
கற்றாழைச் சாறு, ப்ளாக்ஸ் விதைகள் போன்றவை சிறந்த மலமிலக்கிகள் ஆகும். இவை குடல் இயங்குவதை இலகுவாக்குகின்றன. இந்த உணவுகள் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் வயிற்றுக்கு இதமளிக்கிறது. செரிமான மண்டலத்துக்கு நல்லது. மலத்தை இலகுவாக்குகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
மலத்தை இலகுவாக்கும் மருந்துகள்
உங்களுக்கு கடும் மலச்சிக்கல் இருந்தால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகள் உட்கொள்ளலாம். இதை தற்காலிகமாகச் செய்யலாம். வழக்கமாக்கிக்கொள்ளக் கூடாது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்