Congestive Heart Failure : உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் ஏற்படுகிறதா? எச்சரிக்கை! உங்கள் இதயம் திடீரென செயலிழக்கலாம்!
Congestive Heart Failure : திடீரென இதயம் செயலிழப்பது ஏன்? அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன? தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்!

திடீர் இதய செயலிழப்பு என்றால் என்ன?
திடீர் இதய செயலிழப்பு, இதய செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது. இதில் இதயத்தால் பம்ப் செய்யப்படும் ரத்தத்தின் அளவு குறைந்து அது பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே இதய செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்துகொண்டு, சரியான நேரத்தில் அதுகுறித்து ஆய்ந்தறிந்து, அதை மேலாண்மை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வது நல்லது. இந்த திடீர் இதய செயலிழப்பை காட்டும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
மூச்சுத்திணறல்
படிகட்டுகளில் ஏறுவது மற்றும் வேக நடை செய்தால், திடீரென உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உங்களுக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்படும் என்று பொருள். உடற்பயிற்சிகள் செய்யும்போது அல்லது படுத்துறங்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படுவது, இவையெல்லாம் உங்களுக்கு இதய பிரச்னைகள் உள்ளது என்பதை உங்கள் உடல் எடுத்துக்கூறுவதாக கொள்ளவேண்டும்.
உடலின் ஆற்றல் இழப்பு
உடலில் எப்போதும் சோர்வு ஏற்படுவது, குறிப்பாக, சிறிய பயிற்சிக்குப்பின்னர் கூட உங்கள் உடலில் கடும் சோர்வு காணப்படுவது. இதற்கு அதிக உறக்கம் மட்டும் தேவையில்லை. அதிக சோர்வு மற்றும் பலமின்றி காணப்படுவது, உழைப்பு குறைவது ஆகியவை உங்களுக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்படும் ஆபத்தை குறிப்பவையாகும்.
உடலில் தேவையற்ற வீக்கம், நீர்கோர்த்தல்
வயிறு உப்புசம் ஏற்படும். கால், பாதங்கள், கணுக்கால் ஆகியவற்றில் திடீர் வீக்கம் ஏற்படும். கழுத்தில் சில நரம்புகளிலும் வீக்கம் உண்டாகும். உடலில் நீர் கோர்த்தாலும் உங்கள் இதயம் கஷ்டப்படுகிறது என்று பொருள்.
வழக்கமற்ற இதய துடிப்பு
உங்கள் இதயத்துடிப்பு வழக்கத்துக்கு மாறாக இருக்கும். இதய செயலிழப்பு ஏற்படும்போது அது வழக்கத்திற்கு மாறாக இருக்கும். அது அதிகப்படியான சத்தமாக கேட்கும். படபப்பு, வழக்கமில்லாத இதய துடிப்பு ஆகியவை உங்களுக்கு இதய கோளாறு ஏற்படப்போகிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக அமையும்.
உடற்பயிற்சி பிரச்னைகள்
ஒரு வேக நடையோ அல்லது ஒரு மிதமான ஓட்டமோ செய்யும்போது உங்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டாலோ அல்லது உடற்பயிற்சிகளின்போது, உங்களின் சவால்கள் அதிகரித்தாலோ, அது உங்களுக்கு ஏற்படும் இதய பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதாகும். எனவே அதுபோன்ற நேரங்களில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மூச்சுவிடும்போது விசில் சத்தம் வருவது
மூச்சு விடும்வது இயற்கையாக இருக்க வேண்டும். மூச்சு இளைப்பு ஏற்பட்டாலோ அல்லது மூச்சு விடும்போது விசில சத்தம் வந்தாலோ உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கவனம்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சளியுடன் இருமல்
ஒருவருக்கு இருமல் ஏற்படுவது எரிச்சல் நிறைந்தது. ஆனால் அது தொடர்ந்து வந்தாலோ அல்லது வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் சளியுடன் ரத்தம் வெளியேறினாலோ, வழக்கமான சளியைவிட கூடுதலாக இருந்தாலோ, அது திடீர் இதய செயலிழப்பு ஏற்படுவதன் அறிகுறியாகும்.
வயிறு உப்புசம்
உங்கள் வயிறு உப்பி காணப்படும். கிட்டத்தட்ட ஒரு தர்ப்பூசணியை நீங்கள் முழுவதும் முழுங்கினால், எப்படியிருக்குமோ அந்தளவுக்கு வயிறு உப்பியிருக்கும். இதற்கு வயிற்றில் சேரும் தண்ணீர் காரணமாகலாம். இந்த அறிகுறியை மட்டும் நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாது. இது உங்களுக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்படும் என்பதற்கான எச்சரிகையாக உங்கள் உடல் காட்டும் அறிகுறியாகும்.
திடீர் எடை உயர்வு
திடீரென உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக தண்ணீர் கோர்த்து உடல் எடை அதிகரிக்கும்போது நீங்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தை நெருக்கமாக கவனிக்க வேண்டும் என்று அவசியம். உடல் எடை அதிகரிப்பது உணவு அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படுவது வழக்கம். ஆனால் அப்படியில்லாமல் திடீர் எடை அதிகரித்தால், கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
பசி குறைவு
உணவு எப்போதும் நமக்கு மகிழ்ச்சியைக்கொடுக்கக்கூடியது. ஆனால் சாப்பிடும்போது வாந்தி மற்றும் பசி சுத்தமாக இல்லாமல் போவது ஆகியவை ஏற்பட்டால் நீங்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். எனவே உங்கள் உடலில் இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அதில் கவனம் செலுத்துங்கள். அது நீங்கள் உங்கள் இதயத்தை பரிசோதிக்க வேண்டியதை உணர்த்துவதாகவும் இருக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குக ள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்