Valentines Day Gift: காதலர் தினத்திற்கு ரெடியா? உங்க காதலிக்கு என்ன பரிசு கொடுக்க போறீங்க? சில கிப்ட் டிப்ஸ் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Valentines Day Gift: காதலர் தினத்திற்கு ரெடியா? உங்க காதலிக்கு என்ன பரிசு கொடுக்க போறீங்க? சில கிப்ட் டிப்ஸ் இதோ!

Valentines Day Gift: காதலர் தினத்திற்கு ரெடியா? உங்க காதலிக்கு என்ன பரிசு கொடுக்க போறீங்க? சில கிப்ட் டிப்ஸ் இதோ!

Suguna Devi P HT Tamil
Feb 05, 2025 12:50 PM IST

Valentines Day Gift: பிப்ரவரி மாதம் பிறந்து விட்டாலே காதலர்கள் குஷியாகி விடுவார்கள். பிப்ரவரி 14 அன்று வரும் காதலர் தினத்திற்காக இப்போது இருந்தே பரிசு வாங்க தொடங்குவார்கள். உங்கள் காதலிக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும் எனத் தெரியவில்லையா? இதோ சில கிப்ட் ஐடியாக்கள் இங்கே உள்ளன.

Valentines Day Gift: காதலர் தினத்திற்கு ரெடியா? உங்க காதலிக்கு என்ன பரிசு கொடுக்க போறீங்க? சில கிப்ட் டிப்ஸ் இதோ!
Valentines Day Gift: காதலர் தினத்திற்கு ரெடியா? உங்க காதலிக்கு என்ன பரிசு கொடுக்க போறீங்க? சில கிப்ட் டிப்ஸ் இதோ! (Pixabay)

புதியதாக காதலித்து வரும் ஜோடிகளுக்கு தங்களது  இணையரை எவ்வாறு மகிழ்விப்பது, என்ன பரிசு கொடுப்பது என்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக காதலர் தினத்தன்று ஒரு பரிசு கொடுப்பது இயல்பு என்பதால், என்ன பரிசு கொடுப்பது, எதுவாக இருந்தாலும் சரி, அது காதலரால் பாராட்டப்படுமா என்பதில் நிறைய கவலை உள்ளது. காதலர் தினத்தன்று பெண்களுக்கு பரிசுகளை வழங்குவது ஒரு சவாலான பணியாக இருக்கலாம், ஏனென்றால் எளிமையான பரிசாக இருந்தால், அவர்கள் அவற்றைப் பாராட்ட மாட்டார்கள். உங்கள் காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என சில ஐடியாக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

அன்போடு இருப்பது 

ஒரு பெண்ணை பொறுத்த வரை உண்மையான காதல் என்பது நீங்கள் செலவழிக்கும் பணத்தையோ அல்லது பெரிய ரோஜாக்களின் பூங்கொத்தையோ கொடுப்பது அல்ல. மாறாக, அவளுடைய புகார்களுக்கு நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைக் காண்பிப்பது, அவள் விரும்புவதை அறிவது, அவளுடைய வாழ்க்கையை எளிதாக்கும் ஒன்றை பரிசளிப்பதன் மூலம் அவள் உங்களுக்காக என்ன செய்கிறாள் என்பதைப் பாராட்டுவது பற்றியதும் தான் முக்கியம்.

இந்த ஆண்டு காதலர் தின பரிசை உங்கள் காதலிக்கு வழங்க சில குறிப்புகள் இங்கே உள்ளன, அவை நிச்சயமாக உங்களை ஈர்க்கும். இந்த பரிசுகளை நீங்கள் உங்கள் காதலிக்கு கொடுத்தால்,  நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் உங்கள் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதய வடிவ பலூன் ஒளி

காதலர் தின பரிசாக, உங்கள் காதலிக்கு இதய வடிவ பலூன் விளக்கை பரிசளிக்கலாம். ஒரு சாதாரண பலூன் ஆனால் உடைந்து போகலாம். ஆனால் அவள் அறையில் பலூன் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். இது ஷாப்பிங் இணையதளத்தில் கிடைக்கிறது. 

உட்புற தோட்டம்

வீட்டின் உள்ளே சமையலறையில் வைக்கக்கூடிய ஒரு ஏரோகார்டனும் பரிசுக்கு சிறந்த தேர்வாகும். இயற்கையான சூரிய ஒளி கிடைக்காவிட்டாலும் ஏரோகார்டன் தாவரங்கள் வீட்டிற்குள் வளர்கின்றன. அதில் சுவையான வீட்டில் வளர்க்கப்படும் மூலிகைகள், கீரைகள் மற்றும் காய்கறிகளும் கிடைக்கின்றன.

புதிய மற்றும் அதிநவீன சமையல் உடைகள்

சமையல் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலை இல்லை. அது அனைவரும் செய்யக்கூடிய ஒரு பணி. உங்கள் காதலிக்கு சமையல் செய்வதில் அதிகம் ஆர்வம் இருந்தால் அதற்காக நீங்கள் ஒரு புதிய அதிநவீன வடிவமைப்பு சமையல் பாத்திரங்களை பரிசளிக்கலாம். மேலும் சமையல் செய்யும் போது போட்டுக்கொள்ளும் ஆடைகளையும் வழங்கலாம். 

மசாஜர் 

உடல் மசாஜர் உங்கள் காதலிக்கு பயனளிக்கும் பரிசுகளில் ஒன்றாகும். ஜிம்முக்கு செல்லும் போது கால் வலி வந்தாலோ அல்லது நாள்பட்ட வலியால் அவதிப்பட்டாலோ மசாஜ் துப்பாக்கி கைகொடுக்கும். இந்த சாதனங்கள் வலி நிவாரணம் மற்றும் உடற்பயிற்சிக்கு பிந்தைய மீட்புக்கு உதவியாக இருக்கும்.

ஹேர் ட்ரையர் மற்றும் ஸ்ட்ரெய்ட்னர்

உங்கள் காதலி நிச்சயமாக விரும்பும் மற்றொரு பரிசு ஒரு ஹேர் ட்ரையர் மற்றும் ஹேர் ஸ்ட்ரைட்னர். பெண்கள் எப்போதும் தலைமுடியை சீர்ப்படுத்துவதையும், ஒரு விழா அல்லது விருந்துக்குச் செல்வதையும் மிகவும் ரசிக்கிறாள். அதற்கு ஹேர் ட்ரையர் மற்றும் ஸ்ட்ரெய்ட்னர் பரிசாக கொடுங்கள்.

நகைப் பெட்டி

நீங்கள் ஒரு நகைப் பெட்டியை பரிசளித்தால் உங்கள் காதலி அதில் பல்வேறு வகையான நகைகளை அடுக்கி  வைக்கலாம், மேலும் நீங்கள் வெளியே செல்லும்போது பேக் செய்து எடுத்துச் செல்வது எளிதாக இருக்கும்.

இங்கு கொடுக்கப்பட்டவை பொதுவாக வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் ஆகும். உங்கள் காதலிக்கு எதன் மீது ஈர்ப்பு அதிகம் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல பரிசு கொடுங்கள். பெண்கள் அந்த பரிசின் மதிப்பை எதிறப்பார்க்க மாட்டார்கள். மாற்றாக பரிசு வழங்கும் உங்கள் காதலை விரும்புகிறார்கள். மகிழ்ச்சியோடு காதலர் தினத்தை கொண்டாடுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.