ஆழ்ந்து கற்க வண்ண உளவியல் : உங்கள் குழந்தைகள் விரைவாக கற்கவேண்டுமா? இதோ இந்த வண்ண உளவியல் உதவும்!
ஆழ்ந்து கற்க உதவும் வண்ண உளவியல் : இந்த நிற உளவியல் என்பது மாணவர்கள் விரைந்து கற்க உதவும். இதை நீங்கள் செயல்படுத்திப் பார்த்து பயன்பெறலாம்.

வண்ண உளவியல் என்பது நன்றாக கற்பதற்கு நிச்சயம் உதவக்கூடிய ஒன்றாகும். வண்ண தியரி என்பது வாழ்வின் பல்வேறு வழிகளிலும் உதவக்கூடியது. ஃபேஷன் முதல் உணவு, ஓய்வு வரையும் அது பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் படிப்பிற்கும் அது நிச்சயம் உதவக்கூடியது. அதை மிகவும் சிறப்பானதாகவும், ஈசியானதாகவும் மாற்றும். நீங்கள் படிப்பதற்கு எப்படி இந்த வண்ண தியரியை பயன்படுத்தலாம்?
ஊதா (Blue)
ஊதா நிறம், அமைதியான சூழலை ஏற்படுத்துகிறது. அது பதற்றத்தைக் குறைக்கிறது. கவனத்தை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் படிக்கும் அறையில் இந்த நிறத்தை பூசுவதால், அது உங்களுக்கு கடும் சிக்கலான பாடங்களையும் படித்து முடிக்க உதவுகிறது. பிரச்னைகளை தீர்க்கும் திறனுக்கு தொடர்ந்து உற்று கவனிக்க வேண்டியது அவசியம். அதை ஊதா வண்ணம் சாத்தியப்படுத்துகிறது.
மஞ்சள்
மஞ்சள் வண்ணம் உங்களின் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கக் கூடியது ஆகும். மஞ்சள் உங்கள் மனதுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது நீங்கள் நேர்மறையாக சிந்திக்க உதவுகிறது. எனவே நீங்கள் படிக்கும் பகுதிகளில் அதிகம் மஞ்சள் நிறத்திலும் அலங்கரித்து வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். மூளையின் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். இது உங்கள் கிரியேட்டிவ் சிந்தனைகளை அதிகரிக்கும். உங்களின் யோசனைகளை தூண்டும்.
பச்சை
பச்சை என்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். பச்சை மனதில் ஏற்படும் சோர்வைப் போக்கும் வண்ணமாகும். இது மனச்சமநிலையை ஏற்படுத்தும். நீங்கள் ஆழ்ந்து, தொடர்ந்து படிக்கும் நேரத்தில் உங்களின் மனநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே நீங்கள் படிக்கும் இடத்தில் வீட்டின் உள்ளே வளர்க்கும் செடிகளை வளர்க்கலாம் அல்லது பசுமை நிற பொருட்களை வைக்கலாம். இது அந்த சூழலில் உங்களின் கவனத்தை அதிகரித்து, நீங்கள் கற்கும் திறனை மேம்படுத்த உதவும்.
சிவப்பு
சிவப்பு எப்போதும் எச்சரிக்கையை அதிகரிக்கும் வண்ணம். சிவப்பு நிறம் மூளையைத் தூண்டுகிறது. கவனத்தை மேம்படுத்துகிறது. நீங்கள் முக்கியமான அசைன்மென்ட்களை எழுதிக்கொண்டிருக்கும்போது இந்த வண்ணம் சூழ்ந்த இடத்தில் செய்யலாம். ஏனெனில் இது குறுகிய கால கவனத்தை அதிகரிக்கிறது. அதிக ஆற்றலும், உடனடி பதிலும் தேவைப்படும் இடங்களிலும் நீங்கள் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வண்ணமாகும். ஆரஞ்சு, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. இது மனதில் உள்ள சோர்வைப் போக்குகிறது. எனவே ஆரஞ்சு வண்ணத்தை நீங்கள் சவாலான ப்ராஜெக்ட்களில் வேலை செய்யும்போது ஆரஞ்சு வண்ண சூழலில் அமர்ந்து செய்யலாம். அப்போது உங்களுக்கு தொடர் ஊக்கம் கிடைக்கும். உங்களின் ஆற்றல் அளவு குறையும் இடங்களில் நீங்கள் ஆரஞ்சு வண்ணத்தால் நிரப்பினால், எனர்ஜி பூஸ்டாகும்.
கத்தரிப்பூ (Purple)
கத்தரிப்பூ வண்ணம் என்பது அமைதியையும், தூண்டுதலையும் சமமான அளவில் வைக்க உதவுகிறது. எனவே அறிவை நீங்கள் ஏற்பதற்கு ஏற்ற சூழலை இந்த வண்ணம் உருவாக்குகிறது. எனவே நீங்கள் புதிய விஷயங்களை படிக்கும் இடத்தில் பர்பிள் வண்ணம் சூழ்ந்திருக்கட்டும். குறிப்பாக தேர்வுகளுக்கு தயாரிக்கும் இடத்தில் கத்தரிப்பூ வண்ணம் நிறைந்திருக்கட்டும்.
ரோஸ் (Pink)
பிங்க் வண்ணம் இதமான தோற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் படிக்கும்போது இந்த வண்ணம் சூழ்ந்திருந்தால் நீங்கள் படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள அது உதவும். எனவே இளம் ரோஸ் வண்ணத்தை நீங்கள் படிக்கும் நோட் புத்தகங்களுக்கு அட்டைகளாகப் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கு படிப்பவற்றை நீண்ட நேரம் நினைவில் வைத்துக்கொள்ள உதவும். நீங்கள் தேர்வுகளுக்கு முன்னர் ஒருமுறை படித்துக்கொண்டால் போதும் நல்ல முறையில் தேர்வு எழுத உதவும்.
வெள்ளை
தூய்மையான வெள்ளை நிறம் உங்களுக்கு தெளிவைக் கொடுக்கிறது. நீங்கள் எவ்வித இடையூறும் இல்லாத ஒரு சூழலை உருவாக்க வேண்டுமெனில் உங்களுக்கு தெளிவான சிந்தனைகள் கிடைக்கவேண்டுமெனில், அதற்கு வெள்ளை உதவும். எனவே வெள்ளை இடத்தை நீங்கள் எப்போதும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். குறைவாக டிசைன்கள் இருக்கலாம். நீங்கள் சிக்கலான தகவல்களை கற்றுக்கொள்ளும்போது, அதை மனம் எவ்வித குழப்பமுமின்றி மீண்டும் நினைவு கூறவேண்டுமெனில் நீங்கள் தகவல்களை மனதில் இறுத்திக்கொள்ளவேண்டுமெனில் வெள்ளை நிற சூழலில் இருந்து படிக்கவேண்டும்.
